2047ல் இந்தியா உலக வல்லரசு.. லட்சியத்தை நோக்கி அடி எடுத்து வைக்கும் மோடி.. எல். முருகன் பெருமிதம்
தூத்துக்குடி: பிரதமர் மோடியின் ஒரே எண்ணம் 2047ல் இந்தியா உலக வல்லரசாக இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதே அவரது லட்சியம். அதை நோக்கி பிரதமர் மோடி லட்சியத்தோடு அடியெடுத்து வைத்துள்ளார் என்றும் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார். ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார். இந்த விழாவில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். இந்தியில் மோதி என அழைக்கப்படும் தூத்துக்குடி முத்து நகருக்கு இன்றைக்கு பிரதமர் மோடி வந்துள்ளார். கிட்டத்தட்ட ரூ.17,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழகத்துக்கு வழங்கிட வந்துள்ளார்.

மோடி எப்போது எல்லாம் தமிழகத்துக்கு வருகிறாரோ அப்போது எல்லாம் பல்லாயிரம் கோடி ரூபாய் திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வருகிறார். கடந்த முறை தமிழகத்துக்கு வந்து திருச்சி விமான நிலையத்தை தொடங்கி வைத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை தமிழகத்துக்கு கொடுத்தார்.
இரண்டே மாதங்களில் இப்போது ரூ.17,500 கோடி மதிப்பிலான திட்டங்களை கொடுக்க வந்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.11 லட்சம் கோடி திட்டங்களை கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. இதனால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த மாநிலமாக உள்ளது.
உலகத்திலேயே சந்திரனின் தென் துருவத்தில் கால்பதித்தது விண்கலம் சந்திராயன் 3. இதை அனுப்பியவர் பிரதமர் மோடி. விண்வெளி துறையில் உலகத்துக்கே முன்னோடியாக இருந்து வருகிறது இந்தியா.
பிரதமர் மோடியின் ஒரே எண்ணம் 2047-ல் இந்தியா உலக வல்லரசாக இருக்க வேண்டும். இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதே. அதை நோக்கி பிரதமர் மோடி லட்சியத்தோடு அடியெடுத்து வைத்துள்ளார் என்று எல்.முருகன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
-
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
தூத்துக்குடி ரூ.18000 கோடி கப்பல் முதலீடு ஆந்திராவுக்கு கைநழுவியது ஏன்? வெள்ளை அறிக்கை தேவை: ராமதாஸ் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர்












Click it and Unblock the Notifications