தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தையை.. ரூ.3 லட்சத்துக்கு விற்ற மனைவி.. போலீசில் கணவன் புகார்

பெற்ற குழந்தையை விற்ற மனைவி மீது கணவன் புகார் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக தாய் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Recommended Video

    தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தையை.. ரூ.3 லட்சத்துக்கு விற்ற மனைவி.. போலீசில் கணவன் புகார்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன்... இவருடைய மகன் மணிகண்டன்.. 38 வயதாகிறது.. இவருக்கும், தூத்துக்குடி கொத்தனார் காலனியை சேர்ந்த ஜெபமலர் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஜெபமலருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே, கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெபமலர் தனது கணவரை பிரிந்து குழந்தையுடன் தூத்துக்குடிக்கு வந்துவிட்டார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக தூத்துக்குடிக்கு வந்தார். அப்போது வீட்டில் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக ஜெபமலரிடம் கேட்டபோது மழுப்பலாக பதில் கூறியதாக தெரிகிறது.

    விற்பனை

    விற்பனை

    இதனால் சந்தேகமடைந்த மணிகண்டன், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்ததில், ஜெபமலர் தனது குழந்தையை விருதுநகரைச் சேர்ந்த புரோக்கர் ஜேசுதாஸ் என்பவர் மூலமாக தூத்துக்குடியைச் சேர்ந்த அந்தோணி, கிருபா, செல்வராஜ், டேனியல் ஆகியோருடன் சேர்ந்து ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த அவர் குழந்தையை மீட்டுத்தரக் கோரி தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் அளித்தார்.

     தூத்துக்குடி

    தூத்துக்குடி

    அந்த புகாரின்பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார், குழந்தையின் தாய் ஜெபமலர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தை விற்றது குறித்து மணிகண்டன் சொன்னதாவது: "எனக்கு முதல் திருமணம் நடைபெற்று மனைவியை பிரிந்துவிட்டேன்.. தரகர்கள் மூலமாக எனக்கு 2வது மனைவியாக ஜெபமலரை திருமணம் செய்தேன்.

    ஜாதி

    ஜாதி

    அவரும் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்தவர்.. அதனால் இந்த திருமணம் நடந்தது. என்னிடம் ஜாதியை மாற்றி ஜெபமலர் சொல்லிவிட்டார்.. நள்ளிரவு நேரத்திலும் அவருக்கு போன் வந்து கொண்டே இருந்தது.. இது எங்களுக்குள் தகராறாக வெடித்தது. எனவே, இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவும், என்னை விட்டு அவர் தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னுடைய குழந்தையை பார்ப்பதற்காக தூத்துக்குடிக்கு வந்தேன்.. ஆனால், வீட்டில் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து மனைவியிடம் விசாரித்தேன்.. அப்போதுதான் அவர் குழந்தையை 3 லட்ச ரூபாய்க்கு விற்றது பற்றி என்னிடம் சொன்னார்.. எனவே, இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். குழந்தையை மீட்ககாமல் ஊருக்கு செல்லமாட்டேன்" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+