இத்தனை வருட வரலாற்றில் நடக்காத சம்பவம்.. தூத்துக்குடிக்கு வந்த ராட்சசன்.. இதுதான் தரமான சாதனை!
தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பிரம்மாண்ட கண்டெய்னர் சரக்குக்கப்பல்களை கையாளுதலில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியது. எம்.வி. எம்.எஸ்.சி மைக்கேலா (M.V. MSC Michaela) எனும் மிகப்பெரிய சரக்குக் கப்பல் தூத்துக்குடிக்கு நேற்று வந்து சென்றது. இது தூத்துக்குடி துறைமுக வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
டாக்ஷின் பாரத் கேட்வே டெர்மினலுக்கு வந்த இக்கப்பல் 304 மீட்டர் நீளம் கொண்டது. 6,724 TEUs (இருபது அடிக்கு இணையான அலகுகள்) சரக்குக் கொள்ளளவு கொண்ட இது, துறைமுகம் இதுவரை கையாண்ட கப்பல்களில் மிகப்பெரியது. தூத்துக்குடி நோக்கி வந்த ராட்சச கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி நோக்கி வந்த எம்.எஸ்.சி மைக்கேலா
எம்.எஸ்.சி மைக்கேலாவின் வெற்றிகரமான வருகை, தூத்துக்குடி துறைமுகத்தின் மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையை எடுத்துக்காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முக்கிய சர்வதேச துறைமுகங்களில் கையாளப்படும் பெரிய கண்டெய்னர் கப்பல்களை துறைமுகம் தற்போது நிர்வகிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பதை இது காட்டுகிறது.
ஆழமான நீர்வழித்தடங்கள், நவீன டெர்மினல்கள் மற்றும் மேம்பட்ட சரக்குக் கையாளுதல் வசதிகளில் பல வருட முதலீடுகளின் பலனே இந்த வளர்ச்சி என வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் கூறியது. உலகளாவிய கப்பல் நிறுவனங்களை ஈர்த்து சரக்குப் போக்குவரத்தை அதிகரிப்பதே இதன் நோக்கம்.
M.V. MSC Michaela yesterday became the largest container vessel to berth at Thoothukudi VoC Port. With a length overall of 304 metres and a capacity of 6,724 TEUs. Hoping to see more in future when the Outer Harbour Project is over!! #TN #Port 🏗️🚢 pic.twitter.com/9wV16mgTXw
— Chennai Updates (@UpdatesChennai) December 22, 2025
இச்சாதனை, தென்னிந்திய வர்த்தகத்தின் முக்கிய நுழைவாயிலாக தூத்துக்குடியின் நிலையை வலுப்படுத்தும் என கடல்சார் நிபுணர்கள் கூறுகின்றனர். இது தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்களை அதிகரித்து, லாஜிஸ்டிக்ஸ் செலவுகளைக் குறைத்து, துறைமுகம் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.எஸ்.சி மைக்கேலாவின் வருகை, துறைமுகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், மாநிலத்தின் கடல்சார் வணிகத் துறைக்கும் ஒரு நல்ல அறிகுறி என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தென் தமிழகம், தற்பொழுது தென்னிந்தியாவின் புதிய தொழில்துறை மற்றும் ஏற்றுமதி மையமாக விரைவாக வளர்ந்து வருகிறது. வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் அரசின் திட்டமிடப்பட்ட கொள்கைகள் இதற்கு முக்கிய காரணம். வியட்நாமிய மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட், தூத்துக்குடியில் தனது ஆலையைத் தொடங்கியதன் மூலம், இம்முதலீடுகளுக்கு வழி வகுத்துள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தென் தமிழ்நாடு இந்தியாவின் 'முக்கியமான பொருளாதாரப் பாதை' என தமிழக அரசு அதிகாரிகளால் வர்ணிக்கப்படுகிறது.
தூத்துக்குடி அசாத்திய வளர்ச்சி
முன்னதாக 2024 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரிலையன்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி, தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் துறைகளில் புதிய முதலீடுகளை அறிவித்திருந்தார். தற்போது தமிழ்நாட்டில் அவர் மேலும் முதலீடுகளை செய்து வருகிறார்.
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது X தள பதிவில், "சிப்காட் அல்லிகுளம் தொழிற்பூங்காவில் ஒருங்கிணைந்த உற்பத்தி வசதியை அமைக்க ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.1,156 கோடி முதலீடு செய்யும்" என்று தெரிவித்தார். மேலும், "இந்த வசதி 60 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, தின்பண்டங்கள் முதல் பிஸ்கட்கள், மசாலாப் பொருட்கள் முதல் மாவு, சமையல் எண்ணெய் மற்றும் பல பொருட்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரிலையன்ஸ் 2,000 உள்ளூர் வேலைவாய்ப்பு
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஆலை 2,000 உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அமைச்சர் கூறினார். முன்னணி தேசிய FMCG நிறுவனங்களை தமிழ்நாடு தொடர்ந்து ஈர்த்து வருவதாகவும், எந்தவொரு முக்கிய துறையும் பயன்படுத்தப்படாமல் விடப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ்நாடு உணவு மற்றும் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களுக்கான உற்பத்தி மற்றும் தளவாட மையமாக தன்னை நிலைநிறுத்தி வருகிறது. குறிப்பாக வியட்நாமின் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்டின் வருகையுடன் தூத்துக்குடி ஒரு வளர்ந்து வரும் தொழில்துறை மையமாக மாறி வருகிறது.
ரிலையன்ஸ் தூத்துக்குடி
கடந்த மார்ச் மாதத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகாவில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் ரூ.515 கோடி மதிப்பிலான உற்பத்தி வசதியைத் திறந்து வைத்தார். மேலும், பெப்சிகோ நிறுவனம் திருச்சியில் உள்ள மணப்பாறை சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.500 கோடிக்கு மேல் முதலீட்டில் உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் தின்பண்டங்களை தயாரிக்க ஒரு உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், டாபர் இந்தியா நிறுவனமும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடி மதிப்பில் ஒரு உற்பத்தி ஆலையை அமைத்து வருகிறது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications