நீட் வினாத்தாளுடன் தூத்துக்குடி சென்ற வாகனம்.. நடு வழியில் நின்றதால் பரபரப்பு.. இரவில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: நீட் மறு தேர்வு வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. வினாத்தாள் கசிந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தேசிய தேர்வு முகமை, பலத்த பாதுகாப்புடன் வினாத்தாளை அனுப்பி வருகிறது. ராணுவ விமானத்தில் நீட் வினாத்தாள் ஒவ்வொரு நகரங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில், பெங்களூரில் இருந்து மதுரைக்கு கொண்டு வரப்பட்ட நீட் வினாத்தாள், அங்கிருந்து தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த வினாத்தாள் ஏற்றி சென்ற வாகனம், நடு வழியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடன் வந்த பாதுகாப்பு வாகனம் பழுதால், சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துகிறது. நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். இந்த தேர்வு கடந்த மாதம் மே 3 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் முன் கூட்டியே கசிந்தது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

NEET Re-Exam Question Paper Vehicle Halted Midway After Police Escort Breakdown Near Madurai

நீட் தேர்வு வினாத்தாள்

இதையடுத்து அந்த தேர்வை தேர்வு முகமை ரத்து செய்தது. மறு தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது. இதன்படி நீட் மறு தேர்வு வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் எந்த விதத்திலும் கசிந்துவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தேர்வுக்கான வினாத்தாள் தயாரித்த குழுவில் இருந்தவர்கள் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பழுதாகி நின்ற வாகனம்

அதேபோல, வினாத்தாள்களை கொண்டு செல்ல இந்திய விமானப்படை உதவி நாடப்பட்டு உள்ளது. விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் வாயிலாக நீட் வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. பலத்த பாதுகாப்புடன் இந்த வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெங்களூரில் இருந்து மதுரைக்கு நேற்று விமானப்படைக்கு சொந்தமாமான சிறப்பு விமானத்தின் வாயிலாக மதுரை கொண்டு வரப்பட்டது.

மதுரையில் இருந்து தபால்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டு நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. வினாத்தாள் கொண்டு செல்லப்பட்ட வாகனங்களுக்கு முன்னும் பின்னும் மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் தமிழக காவல்துறையின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு காவலுக்கு சென்றது.

நெல்லைக்கு ஹெலிகாப்டரில் கொண்டு வரப்பட்டது

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நீட் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வினாத்தாள்களுக்கு பாதுகாப்பாக சென்ற எஸ்கார்ட் வாகனம் திடீரென பழுதடைந்தது. ஏர்போர்ட்டில் இருந்து 600 மீட்டர் தொலைவு மட்டுமே சென்ற நிலையில் வாகனம் அப்படியே நின்றது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டது. போலீஸ் தரப்பில் மாற்று பாதுகாப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து, வினாத்தாள் வாகனம் கிளம்பியது.

இன்று காலை நெல்லை பாளையங்கோட்டைக்கு விமானப்படை ஹெலிகாப்டரில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வுக்கான வினாத்தாள் அங்கிருந்து வங்கிகளின் லாக்கர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தேர்வு நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக இந்த வினாத்தாள்கள் வங்கி லாக்கரில் இருந்து தேர்வு மையத்திற்கு எடுத்து செல்லப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+