தூத்துக்குடி வர்றேன்னுதான் சொன்னாங்க.. அதுக்குள்ளவா? நிர்மலா சீதாராமன் எக்ஸ் பக்கத்தில் 'ரணகளம்'
சென்னை: தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை தாம் பார்வையிட வரவிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பக்கத்தில் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கடும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை டிசம்பர் 18-ந் தேதி பெருமழை வெள்ளம் புரட்டிப் போட்டது. இன்னமும் தென் மாவட்டங்கள் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தத்தளிக்கின்றன.

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார். தமிழ்நாட்டு பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்றார். அத்துடன் அப்போது நிர்மலா சீதாராமன் பயன்படுத்திய வார்த்தைகளும் அவரது உடல் மொழியும் மிக கடுமையான எதிர்ப்பை தமிழ்நாட்டில் உருவாக்கிவிட்டது. தமிழ்நாட்டு அரசியல் இயக்கத் தலைவர்கள் இன்னமும் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இப்பின்னணியில் வரும் டிசம்பர் 26-ந் தேதி (நாளை) தூத்துக்குடி வெள்ளப் பாதிப்புகளை தாம் பார்வையிட வருவதாக நிர்மலா சீதாராமன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே பக்கத்தில் நெட்டிசன்கள் கடும் கருத்துகளை பதிலாக பதிவிட்டு வருகின்றனர்.
Programme details of Smt @nsitharaman's visit to Thoothukudi, Tamil Nadu on December 26, 2023. pic.twitter.com/MVOiN3d5tF
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) December 23, 2023
அதில், தமிழ்நாட்டு மக்கள் புயல் மழை வெள்ளத்தால் பாதிச்சிருக்காங்க அவங்களுக்கு எந்தவிதமான உதவியும் செய்யாமல் இந்த வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது எனக் கூறியவர் வருகிறாராம். இந்த வாய்ப்பை தூத்துக்குடி மக்கள் பயன்படுத்திக் கொண்டு தக்க பதிலடி தருவார்கள் என @dhinakarank65 என்ற நெட்டிசன் எழுதியுள்ளார். தர முடியாது என இரக்கமற்று பேசி விட்ட பின்னர் வருவது எதற்காகவாம்? அச்சத்தாலா... நாணத்தாலா...என கேள்வி கேட்டுள்ளார் @Mallika17339983 என்ற நெட்டிசன். நீங்கள் என்ன பிரதமரா? என சிலர் கேள்வி கேட்டிருக்கின்றனர். டேமேஜ் கண்ட்ரோல் என்பதற்காக தூத்துக்குடி வருகிறீர்களா? எனவும் அதில் பதிவிடப்பட்டுள்ளது. நீங்கள் ஏன் தமிழ்நாட்டுக்கு வரனும்? என ஒரு நெட்டிசன் எதிர் கேள்வி கேட்டுள்ளார். இப்பக்கத்தில் தொடர்ந்து நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications