5 நாட்கள் ஆச்சு.. இன்னும் கழுத்தளவு தண்ணீர் இருக்கு.. ஏரல் அருகே தவிக்கும் மக்கள்
தூத்துக்குடி: மழை வெள்ளத்தால், வீட்டில் எந்த பொருளும் இல்லை. வீட்டில் இருந்த எல்லா பொருளும் அடித்து செல்லப்பட்டுவிட்டது. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் கனமழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 95 செ.மீட்டர் மழை பெய்து மிரட்டியது. தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் இரு மாவட்டங்களும் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

ஆறுகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் கரையோர குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு தற்போது வரை வெள்ள நீர் வடியாததால் மக்கள் சிரமமடைந்துள்ளனர். தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சில இடங்களில் குடியிருப்பு பகுதியில் இன்னும் 4 அடிக்கு தண்ணீர் நிற்பதால் அங்குள்ள மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
வீட்டில் எந்த பொருளும் இல்லை. வீட்டில் இருந்த எல்லா பொருளும் அடித்து செல்லப்பட்டுவிட்டது. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என அந்த கிராம மக்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சம்மடி காலனியை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், "எல்லாமே போயிட்டு.. உடுப்பதற்கு உடை கூட இல்லை.. இப்போ அணிந்திருக்கின்ற நைட்டியும் சட்டையும் தான் இருக்கிறது. பால் பாக்கெட் கூட இல்லை. இப்போதும் வயிற்று வரை தண்ணீர் போகுது. இரண்டு பாட்டி இருக்கின்றனர்.
அவர்கள் இரண்டு நாட்களாக சாப்பிடவே இல்லை. குடிக்க தண்ணீர் கிடையாது. சனிக்கிழமை வந்த மழை.. 5 நாட்களாக நாங்க இப்படித்தான் இருக்கோம். நாங்க இங்க மாடியில இருக்கோம். சில பேர் பஞ்சாயத்து கட்டிடத்தில் இருக்காங்க. வீட்டில் இருக்கிற எல்லா பொருளுமே அடிச்சிட்டு போயிட்டு.. இப்போது வரை வீட்டுக்குள்ளே போக முடியல. இன்னும் வெள்ள நீர் வடியல.. கழுத்தளவுக்கு இப்பவும் தண்ணீர் இருக்கு. ரொம்ப கஷ்டப்படுகிறோம். என்று கூறினார்.
இதேபோல் அதே ஏரல் அருகே இடையூர் ஊராட்சியை சேர்ந்தவர் கூறுகையில், கடந்த சனிக்கிழமையில் இருந்து இங்கே தான் இருக்கோம். வெள்ளம் வரும்போது 9 அடிக்கு தண்ணீர் இருந்தது. இதுவரைக்கும் யாரும் எங்களை பார்க்க வரவில்லை. குடிக்க தண்ணீர் கூட கிடையாது. சாப்பிடுவதற்கு சாப்பாடு கூட இல்லை. இதுக்கு முன்னாடி இப்படி நடந்தது இல்லை..
வீட்டீல் எதுவுமே இல்லை. உடுத்த உடை கூட கிடையாது. இந்த துண்டும் வேஷ்டியோடு தான் இருக்கிறேன். பிரிட்ஜ், டிவி என எல்லா பொருளும் அடிச்சுட்டு போயிட்டு. வீடு ஒரு 15 வீடுகள் இடிஞ்சிட்டு, 100 ஆடுகள் இறந்துவிட்டன. கோழி, மாடுகள் என நிறைய இறந்துட்டு.. சாப்பாடு பொங்க வேண்டும் என்றால் அதற்கு கூட ஒரு பொருளும் இல்லை. இதுவரை யரும் எங்களை வந்து பார்க்கவில்லை" என்று கூறினார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications