Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடி அருகே பெட்ரோல் பங்க் மேனேஜர் வெட்டி கொலை.. விபத்து போல சித்தரிக்க முயன்ற கும்பல்.. ஷாக்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெட்ரோல் பங்க்கில் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவரை காரால் மோதி கீழே விழச் செய்து பின்னர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் கயத்தார் அருகே உள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் சங்கிலி பாண்டி (வயது 29) வேலை பார்த்து வந்தார். மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இன்று வழக்கம் போல் அவர் காலையில் பணிக்கு சென்றுள்ளார்.

petrol-bunk-manager-hacked-to-death-near-thoothukudi-police-begins-investigation

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் பெட்ரோல் பங்கிற்கு வரவில்லை. இது தொடர்பாக செல்போனில் முயற்சி செய்த போதும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அவர்கள் நண்பர்கள் சிலருக்கு போன் செய்து விசாரித்து பார்த்துள்ளனர். இதற்கிடையே கடம்பூர் சாலையில் யாரோ மர்ம நபர்கள் அவரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அங்கு சென்று விசாரித்தனர்.

இதில் ரத்தக்கறையுடன் உயிரிழந்த நிலையில் சங்கிலி பாண்டி கிடந்துள்ளார். அருகில் ஒரு காரும், அவரது மோட்டார் சைக்கிளும் இருந்தன. சம்பவம் தொடர்பாக போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் இருந்து பெட்ரொல் பங்கிற்கு கிளம்பி சங்கிலி பாண்டியன் கடம்பூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் ஒன்று வேண்டுமென்றே அவர் மீது மோதியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சங்கிலி பாண்டியனை, அந்த காரில் இருந்த நபர்கள் இறங்கி வந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து சங்கிலி பாண்டியன் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் எதற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முதலில் காரை விட்டு மோதச்செய்து ஒரு விபத்து நடந்தது போல சித்தரிக்கவே அந்த கும்பலினர் முயற்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் காரை விட்டு மோதியதிலும் சங்கிலி பாண்டியன் உயிரிழக்கவில்லை. இதனால் தான் காரில் இருந்து இறங்கி அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. முன் விரோதம் காரணமாக தான் இந்த கொலை நடந்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். போலீசார் சம்பவ இடத்தில் நின்ற காரை பறிமுதல் செய்து கொலை கும்பலை தேடி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+