தாஜா செய்த கூஜா பூசாரி.. மிரண்டு போன அடுத்தடுத்த பெண்கள்.. அதிருந்து போன கோவில்பட்டி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: பரிகார பூஜை நடத்துவதாக கோவில்பட்டியில் பெண்களை ஏமாற்றி நகைகளை பறித்து சென்ற கூஜா பூசாரியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வில்லிசேரி இந்திரா நகர் நடுத்தெருவைச் சேர்ந்த தங்க மாரிமுத்து மனைவி முருக லட்சுமி (42). இவர் ப்பம்பட்டியில்
உள்ள மாடசாமி கோவிலுக்கு சாமிகும்பிட சென்றுள்ளார். அப்போது கோவில்பட்டி முத்துநகரை சேர்ந்த முத்துராமலிங்கம் ( கூஜா பூசாரியை ) சந்தித்துள்ளனர்

அப்போது கூஜா பூசாரி முருகலட்சுமியிடம் உங்களுக்கு குடும்ப பிரச்சனை இருக்கிறது பரிகார பூஜை நடத்தினால் சரியாகிவிடும் என கூறியுள்ளார். இதை நம்பி முருகலட்சுமி தனது வீட்டிற்கு முத்துராமலிங்கத்தை வர வைத்து பரிகார பூஜை (கூஜா பூஜை) நடத்தியுள்ளார். அப்போது செயினை கூஜாவில் துணியை வைத்து மூடி சாமி படத்திற்க்கு பின்னால் வைத்து 48 நாட்களுக்கு பிறகு திறந்து பார்த்தால் பிரச்சனை தீரும் என பூசாரி கூறியுள்ளார். இதை நம்பி முருகலட்சுமி 5 பவுன் செயினை கூஜாவில் வைத்து விட்டார்.

திறந்து பார்த்தார்

திறந்து பார்த்தார்

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல நபர்களை கூஜா பூசாரி பலரை ஏமாற்றியது பற்றி டி.வி.யில் செய்தி வெளிவந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த
முருகலட்சுமி தனது நகையை கூஜாவில் இருக்கிறது என சாமி படத்திற்கு பின்னால் வைக்கப்பட்ட கூஜாவை திறந்து பார்த்தார்.

கயத்தாறு போலீஸ்

கயத்தாறு போலீஸ்

அப்போது தான் அதில் இருந்த 5 பவுன் செயின்களை காணவில்லை என்பதும் தானும் ஏமாற்றப்பட்டதும் அப்பெண்ணுக்கு தெரிந்துள்ளது. இது குறித்து முருகலட்சுமி கயத்தாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நகைகள் பறிப்பு

நகைகள் பறிப்பு


ஏற்கனவே கூஜா பூசாரி முத்துராமலிங்கம் கோவில்பட்டி பகுதியில் பலரை ஏமாற்றி நகை திருடிய சம்பவம் அரங்கேறி வரும் நிலையில் தற்போது அருகில் உள்ள காயத்தார் பகுதியில் பெண்களை ஏமாற்றி நகை பறித்தது தெரியவந்துள்ளது.

கோவில்பட்டி போலீஸ்

கோவில்பட்டி போலீஸ்

மேலும் இன்னும் எத்தனை பேரை ஏமாற்றி உள்ளார் கூஜா பூசாரி என்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என தெரிகிறது. இதற்கிடையே கூஜா பூசாரியை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் முத்துராமலிங்கத்தை கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+