சாக்லேட் கொடுத்த சசிகலா..உற்சாகத்தில் தொண்டர்கள் -பரபரப்பாகும் அதிமுக, விறுவிறுப்பாகும் அரசியல் களம்
தூத்துக்குடி: தன்னை பார்க்க வந்த தொண்டர்களை சந்தித்துவிட்டு, அவர்கள் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்திருக்கிறார் சசிகலா.
இதனால் இரட்டை தலைமைக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இதையடுத்து தென் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கூட்டம் கூட்டமாக தொண்டர்கள் காத்திருந்து சசிகலாவை சந்தித்து செல்கின்றனர்.

தொண்டர்கள்
இரண்டு நாள் சுற்று பயணமாக நேற்றும் இன்றும் சசிகலா தென்மாவட்டங்களில் சுற்று பயணம் மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.
நேற்று மதியம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய சசிகலா திருநெல்வேலி மாவட்டம், விஜயாபதியில் உள்ள விஸ்வாமித்தரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.

தரிசனம்
தொடர்ந்து அவர் மாலை திருச்செந்தூரில் தங்கினார். இன்று காலை திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்து திருநெல்வேலி நோக்கி சென்றார். அப்போது ஸ்ரீவைகுண்டம் மற்றும் செய்துங்கநல்லூரில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூடியிருந்த கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

சாக்லேட்
அப்போது தொண்டர்கள் கொடுத்த மரியாதையை ஏற்றுக்கொண்டார் சசிகலா. அங்கிருந்த தொண்டர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர். அந்த குழந்தைகளை அழைத்து தன்னிடம் இருந்த சாக்லேட்டுகளை வழங்கினார். குழந்தைகள்ளும் பெற்றோர்களும் இதனால் மகிழ்ச்சியோடு சென்றனர்.

சசிகலா
முன்னாள் முதல்வரான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து ஊழல் வழக்கில் அவர் சிறை சென்ற நிலையில் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதன்பிறகு கட்சியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். தற்போது உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியதால் இரட்டைத் தலைமை வேண்டாம் என்றும், மீண்டும் கட்சியில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்றும் அதிமுகவில் குரல்கள் எழுகின்றன.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications