தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாத்தான்குளம் 2 பேர் மரணம் : ஆறுதல் கூறி அரசு நிதி ரூ.20 லட்சம் கொடுத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ

லாக் அப் மரணத்திற்கு தமிழக அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். கோவில்பட்டி சிறையில் மரணமடைந்த சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: கோவில்பட்டி சிறையில் மரணமடைந்த சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 20 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டது. லாக் அப் மரணத்திற்கு தமிழக அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். மரணமடைந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம்.. தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர், அங்குள்ள காமராஜர் சிலை அருகில் செல்போன் விற்பனைக்கடை நடத்தி வந்தார். கொரோனா வைரஸ் பரவி வருவதால் கடைகள் திறக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 19 தேதி, மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும்,கடையைத் திறந்து வைத்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய போலீசாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்சுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    Sathankulam custodial death : Tamil Nadu Minister gives relief fund Rs.20 lakh

    இதனைத் தொடர்ந்து தந்தை மகன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருவரையும் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மறுநாள் காலையில் கோவில்பட்டி கிளை சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். இதில் இருவருக்குமே நெஞ்சுவலி ஏற்பட்டதால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி கடந்த 2 தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து மறுநாள் காலையில் தந்தை ஜெபராஜூம் மரணமடைந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தந்தை, மகன் மரணத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்த பின்னரும் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் உடல்களை பெற்று நல்லடக்கம் செய்தனர்.

    Sathankulam custodial death : Tamil Nadu Minister gives relief fund Rs.20 lakh

    பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உயிரிழந்தவர்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    நாடு விட்டு நாடு..... மதுபாட்டில்கள் வாங்க 3 மாவட்ட எல்லைகளுக்கு படையெடுத்த மதுரை குடிமகன்கள்நாடு விட்டு நாடு..... மதுபாட்டில்கள் வாங்க 3 மாவட்ட எல்லைகளுக்கு படையெடுத்த மதுரை குடிமகன்கள்

    அதன்படி இன்று சாத்தான்குளத்தில் மரணமடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்குச் சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, 20 லட்சம் ரூபாயை குடும்பத்தினரிடம் வழங்கினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய அவர், லாக் அப் மரணங்கள் அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இதனிடையே அதிமுக சார்பிலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Sathankulam custodial death TamilNadu Minister Kadambur Raju has given relief fund Rs.20 lakhs to victim's kin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X