மழை வெள்ளத்தில் ஆவணங்கள் போய்விட்டதா? நாளை முதல் 2 நாள் முகாம்! தூத்துக்குடி மக்களே மிஸ் பண்ணாதீங்க
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சேதமடைந்த மற்றும் அடித்து செல்லப்பட்ட ஆவணங்களை பெற 2 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் லட்சுமபதி அறிவித்துள்ளார்.
கடந்த 17 , 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வந்தது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. வீடுகள் இடிந்ததோடு, சிலர் உயிரிழந்தனர். மேலும் கால்நடைகள் பலியாகின. மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டனர். அதோடு இளைஞர்கள், மீனவர்களும் மக்களை காப்பாற்றினர்.
தற்போது இருமாவட்டங்களில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில் மக்களின் கல்வி சான்றிதழ்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் சேதமாகி உள்ளன. மேலும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
‛சரியும் ஆணவ சாம்ராஜ்யம்’.. திமுகவுக்கு சாபமிட்டு சபதமேற்ற தமிழிசை.. ஆக்ரோஷத்துக்கு காரணமான ட்ரோல்
இந்நிலையில் தான் இந்த ஆவணங்களை இலவசமாக மக்கள் பெற்று கொள்ள தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது. மேலும் இதற்கான சிறப்பு முகாம்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நடத்த வேண்டும் என தெரவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவணங்களை பெற 2 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த ஆவணங்கள், சான்றுகளை பெற ஏதுவாக நாளை (டிசம்பர் 28) மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 29) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
‛‛வாய்ப்பே இல்லை’’.. கோரிக்கை வைத்து நின்ற தங்கம் தென்னரசு! மீண்டும் அழுத்திய நிர்மலா சீதாராமன்
இந்த 2 நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று மக்கள் தங்களின் சான்றிதழ், ஆவணங்களை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications