வேட்புமனுவை கரெக்டா நிரப்பி கொடுங்க.. தவெக வேட்பாளரை திருப்பி அனுப்பிய தேர்தல் அதிகாரி!
தூத்துக்குடி: தமிழக வெற்றிக் கழகத்தின் ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளர் சரவணன், இன்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற நிலையில், மனுவை முழுமையாக நிரப்பி கொடுக்க வேண்டுமென்று கூறி, தேர்தல் அலுவலர் மனுவை பெற மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பான வீடியோ, சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேரான நிலையில், என்னதான் அரசியலுக்கு புதியதாக இருந்தாலும், வேட்புமனுவை கூடவா சரியாக நிரப்ப தெரியாது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர். மனு தவறாக இருக்கும்பட்சத்தில், அது நிராகரிக்கப்படும். எனவேதான் அதிகாரி, மனுவை வாங்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார்.

என்ன நடக்கிறது தவெகவில்?
தமிழக வெற்றிக் கழகம், இதர அரசியல் கட்சிகளை போல.. கள அரசியலில் இருந்து வந்த இயக்கம் கிடையாது. சினிமா ரசிகர்களின் பின்னணியை கொண்ட கட்சி இது. ஆனால், அரசியல் என்று வந்துவிட்டால், எல்லோருக்கும் விதி ஒன்றுதான். தவெகவுக்கும் இது பொருந்தும். இருப்பினும், தவெக தலைவர்கள் செய்யும் தவறுகள் சாதாரண நிர்வாகிகள் வரை எதிரொலிப்பதால், ஏராளமான விமர்சனங்கள் ஏற்படுகின்றன.
விஜய் செய்த தவறு
தேர்தலில் போட்டியிட வேட்புமனு அளிக்க வேண்டும். அதில் தவறான தகவல்கள் தப்பி தவறி கூட, இடம்பெறக்கூடாது. ஆனால், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் தாக்கல் செய்திருந்த மனுவில் சில குளறுபடிகள் இருந்தன. குறிப்பாக, வயது குறித்த அவர் அளித்திருந்த தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தன. அதேநேரம், வழக்கு விவரம் குறித்தும் அவர் பதிவிட்டிருந்த தகவல்களும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தன.
இந்நிலையில், இன்று இரண்டு தொகுதிகளிலும் கூடுதல் பிரமாண பத்திரத்தை விஜய் தாக்கல் செய்திருந்தார்.
விஜய் வழியில் நிர்வாகிகள்
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய முயன்றபோது, மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி வாங்க மறுத்திருப்பது விவாதமாகியிருக்கிறது. ஒரு தொகுதியில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக இருக்கும் நபருக்கு வேட்புமனுவை கூட சரியாக நிரப்ப தெரியவில்லையா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
இது தொடர்பான வீடியோவில், தேர்தல் அதிகாரி செந்தில்வேல் முருகன், மனுவில் போதுமான தகவல்கள் நிரப்பப்படவில்லை, ஒன்றுமே இல்லாமல் இருக்கிறது என்று கூறி, மீண்டும் சரியாக நிரப்பி கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.
-
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்து இரவு முழுவதும் தங்கிய அமைச்சர் மதன் ராஜாவுக்குப் பாராட்டு -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications