தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையில் இன்று காலை முதல் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி உள்ளது.

கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக இந்தியாவில் ஒரே நாளில் 4500 பேர், கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறையும் பல மாநிலங்களில் நீடிக்கிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசின் அனுமதியுடன் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி

கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறையும் பல மாநிலங்களில் நீடிக்கிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசின் அனுமதியுடன் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

உற்பத்தி திடீர் நிறுத்தம்

உற்பத்தி திடீர் நிறுத்தம்

இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. ஆனால் திடீரென இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இன்று முதல் உற்பத்தி

இன்று முதல் உற்பத்தி

இந்த பழுது தற்போது சரிசெய்யப்பட்ட நிலையில் இன்று காலை முதல் திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியுள்ளது. இதனையடுத்து இன்று பகல் முதல் லாரிகள் மூலம் ஆக்சிஜன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மூடல் ஏன்?

ஸ்டெர்லைட் ஆலை மூடல் ஏன்?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிலம், நீர் ஆகியவற்றை மாசுபடுத்தி மக்களுக்கு உடல்நலக் கேடுகளை விளைவிக்கிறது என்பதற்காக இதனை மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+