திருச்செந்தூர் கடலோரத்தில்.. முருகன் கோயில் கலசத்தில் பார்த்தீங்களா? ராஜகோபுரத்தில் பரவசம்.. வாவ்
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்தையும் நடத்திட வேண்டும் என்பதற்காக திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன.. இது தொடர்பான பணிகளும் வேகம் எடுத்துள்ள நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது, கடற்கரைக்கு அருகிலேயே அமைந்துள்ளது... உலக அளவில் புகழ்பெற்ற இந்த கோயிலில் விஷேச, விரத, விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சாதாரண நாள்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்று செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

எனவே, பக்தர்களின் வசதிக்காகவே, ரூ.300 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.. அத்துடன், 15 வருடங்களுக்கு பிறகு, திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், அடுத்த வருடம் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது..
9 கலசங்கள்: இந்த கும்பாபிஷே பணிகள் கடந்த 2022-ம் ஆண்டிலிருந்தே சுமார் 100 கோடி செலவில் நடந்துகொண்டிருக்கின்றன.. இதன்ஒருபகுதியாக, ரூ.16 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரத் திருப்பணிகள் துவங்கியது. 137 அடி உயரமும், 9 நிலைகளையும், 9 கலசங்களையும் கொண்ட ராஜகோபுரத்தை முற்றிலும் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணியும், ராஜகோபுரத்தின் கீழ்த்தளப் பகுதிகள், தூண்கள் போன்றவற்றை புதுப்பிக்கும் பணிகளும் மும்முரமாக நடந்துள்ளன.
2 மாதங்களுக்கு முன்பு, ராஜகோபுரத்தின் மேலுள்ள 9 கலசகங்கள் ஆகம விதிப்படி பூஜை செய்யப்பட்டுத் தனியாக பிரித்துக் கீழே கொண்டு வந்து புதுப்பிக்கும் பணி துவங்கியது.. அப்போது 9 கலசங்களிலுள்ள பழைய வரகு மாற்றப்பட்டபோது, கலசத்துக்குள் இருந்த வரகு, அதன் தன்மை மாறாமல்இருந்ததை கண்டு, அறநிலையத்துறை அதிகாரிகளும், பக்தர்களும் ஆச்சரியப்பட்டார்கள்.

புதுப்பிப்பு: கடந்த 1983-ம் ஆண்டு கும்பாஷேகம் நடந்தபோது, இந்த 9 கலசங்களும் கீழே இறக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. அதற்கு பிறகு 41 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் 9 கலகங்களும் இறக்கப்பட்டுள்ளன.
இந்த கும்ப கலசங்களை பண்ருட்டியைச் சேர்ந்த ஸ்தபதி சரவணன் என்பவர் தலைமையில் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. ஏழே முக்கால் அடி உயரம் கொண்ட செம்புகளால் ஆன கலசத்தில் 11 அடுக்குகள் உள்ளதாம். இதில் வாழைப்பூ, சூரியப் பூ-2, சூரியப் பூ தட்டு, மேல்பகுதி அரடா-2, கீழ்ப்பகுதி அரடா-2, குடம் மேல்பகுதி, குடம் கீழ்ப்பகுதி, பத்ம பீடம் என 11 அடுக்குகள் உள்ளன..
பெருகும் ஆர்வம்: முதலில் கலசங்களில் உள்ள அழுக்கு தனியாக பிரித்து எடுக்கப்பட்டு, அதற்கு பிறகு பழுது பார்க்கப்படும் என்றும், அதற்கு பிறகே புதுப்பிக்கப்படும் என்றும் சொல்கிறார்கள். எனவே, 9 கலசங்களையம் புதுப்பிக்கும் பணி, இரண்டு மாதத்திற்குள் முடிவடையும் என்கிறார்கள்.. அந்தவகையில் திருச்செந்தூர் கோயில் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி இக்கோயிலில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹெச்.சி.எல்., நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள்தான் தற்போது நடந்து வருகிறது. இதோடு அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி செலவில் கும்பாபிஷேக திருப்பணிகளும் சேர்ந்து நடைபெறுகிறது.. இதில் ஒரு பகுதியாகவே, 137 அடி உயரமும், 9 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் உச்சக்கட்ட வேகத்தில் நடப்பதாக கூறுகிறார்கள்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications