மகளிர் உரிமைத்தொகை.. எஸ்எம்எஸ் வரவில்லை என்றால்.. அமைச்சர் கீதா ஜீவன் சொன்னதை கவனிச்சீங்களா
தூத்துக்குடி : மகளிர் உரிமைத்தொகை வாக்கு வங்கிக்காக செயல்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் கீதா ஜீவன் மறுத்துள்ளார்.குறுசெய்தி வரவில்லை என்றால் கவனத்திற்கு கொண்டு வரலாம் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு முனிய செல்வி என்ற பெண் சமைக்கிறார். இவர் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் ஆவார்.

இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகள், எஸ்சி பெண் சமைத்து சாப்பிடுவதா என்று கூறி சாப்பிடவிட மறுத்துள்ளார்கள். 11 மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் சாப்பிடவிட மறுத்த புகாரின் பேரில் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் நேரில் வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் நேரடியாக அந்த பள்ளிக்கு சென்றனர்.அங்கு பட்டியல் இன பெண் சமைத்த காலை உணவை ருசித்து சாப்பிட்டனர். அப்போது சில குழந்தைகளும் சேர்ந்து அவருடன் சாப்பிட்டனர். இதையடுத்து சாதியை காரணம் காட்டி மறுத்த பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை சாப்பிட அனுமதித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கீதா ஜீவன் பிரபல செய்தி ஊடகத்திற்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, எட்டயபுரத்தில் சாதிய பிரச்சனை இல்லை.. தனிப்பட்ட முறையில் பிரச்சனை இருந்ததால் குழந்கைளை உணவருந்த பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை.
சாதிய எண்ணங்களை மாணர்களிடம் உருவாக்குவது பெரும் குற்றம்.. சாதிய எண்ணங்களை களைய வேண்டும் என்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார் என்றார்.
மகளிர் உரிமை தொகை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன், குறுஞ்செய்தி வரவில்லை என்றால் கவனத்திற்கு கொண்டு வரலாம்.வங்கி கணக்கில் பணம் செலுத்துவதால் பணியாளர்களுக்கு பணிச்சுமை இருக்காது. நடைமுறைச் சிக்கல்கள் எழுந்தால உடனுக்குடன் தீர்வு காண்போம் என்று உறுதி அளித்தார்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அதிமுக பாராட்டுமா என்று கேள்வி எழுப்பிய அமைச்சர்,ஏழை குடும்பங்களுக்கு திட்டத்தின் மகத்துவம் புரிந்துள்ளது என்றார். குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களின் அர்ப்பணிப்பு அளப்பரியது என்று கூறிய அமைச்சர் கீதா ஜீவன், பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தவே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது என்றும், சமூக நீதி காக்கும் திட்டங்களில் ஒன்று தான் இந்த மகளிர் உரிமை தொகை என்றும், வாக்கு வங்கிக்காக செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
முன்னதாக நேற்று மகளிர் உரிமை தொகை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் மீட்டிங்கில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரும் செப்டம்பர் 15 முதல் கிடைக்கும் வகையில் நாம் ஏற்பாடு செய்துள்ளோம். இத்தகைய தகுதி பெற்ற குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும்.

ஏடிஎம் கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஏடிஎம் கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்ச்த சிக்கலும் ஏற்படக் கூடாது, அதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
அதேபோல், வரும் 15-ம் தேதி, என்னுடைய சார்பில் மகளிருக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில், பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய Toll-Free எண்ணும் சேர்க்கப்பட வேண்டும். இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர்.
அப்படியானால் மற்றவர்களது கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லியாக வேண்டும். எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும்." என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications