பூ மழை தூவி... வசந்தங்கள் வாழ்த்த.. தூத்துக்குடியை கலக்கும் தமிழிசை.. அப்ப கன்பர்ம் போல!
தூத்துக்குடி கூட்டங்களில் தமிழிசை சவுந்தராஜன் கலந்து கொண்டார்.
தூத்துக்குடி: அப்படின்னா தூத்துக்குடியில் தமிழிசை நிற்கபோவது கன்பார்ம் போல இருக்கு! எப்படி கனிமொழி பெருவாரியான கூட்டத்தில் பங்கெடுத்து வருகிறாரோ அதேபோல தமிழிசையும் இறங்கிவிட்டார்!
நேற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இது சம்பந்தமாக 2 ட்வீட்களையும் பதிவிட்டு நிகழ்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டிருந்தார்.
இன்றும் திருச்செந்தூர் பகுதிக்கு தமிழிசை சென்ற சம்பவத்தையும் ட்வீட்டில் பதிவிட்டுள்ளார். அதில் "மாவட்டம் திருச்செந்தூா் சட்டமன்ற தொகுதி தென்திருப்பேரையில் அன்பு சகோதர,சகோதரிகளின் சிறப்பானதொரு வரவேற்பு..." என்று பதிவிட்டுள்ளார். ஆக... தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவது கன்பர்ம்ட் ஆகி வருகிறது.
|
போட்டோக்கள்
இந்த ட்வீட்டுகளில் அந்தந்த இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் போட்டோக்களை தமிழிசை பதிவிட்டுள்ளார். ஒவ்வொன்றிலும் தமிழிசையை வரவேற்பதும், அவருக்கு மாலை அணிவிப்பதும், என கூட்டம் களை கட்டுகிறது.

கார்
இதாவது பரவாயில்லை.. இன்று பதிவிட்ட வீடியோ ஒன்றில் கார் கதவை திறந்துவிட்டு உள்ளிருந்தபடியே எழுந்து நிற்கிறார். ஒரு கையால் கார் கதவை பிடித்தும், மற்றொரு கையால் வரவேற்கும் மக்களை பார்த்தும் கை அசைக்கிறார்.

சால்வைகள்
சுற்றிலும் பூ மழைதான்... கார் முழுக்க பூக்கள் சிதறி விழுகின்றன. பிறகு ஒரு கையால் கார் கதவை பிடித்து கொண்டே அப்படியே ஒரு ஜம்ப்... கீழே இறங்கியதும் சால்வைகள் போர்த்தப்படுகின்றன. தாரை தப்பட்டைகள் முழக்கம் கேட்டு கொண்டே இருக்கிறது. சுற்றிலும் செல்போன்களை வைத்து செல்பிகள், போட்டோக்களும் மக்கள் எடுத்து தள்ளுகிறார்கள்.

ஆரத்திக்கு ரூ.2000
அங்கிருந்து நகர்ந்து கட்சி கொடியேற்றிவிட்டு திரும்பி செல்லும்வரை தமிழிசை மீது சாமந்திபூக்கள் வீசப்பட்டே இருந்தன. தமிழிசை மஞ்சள் நிற சேலை அணிந்திருந்தார். அதில் சாமந்தி பூக்களும் வீசப்பட்டதால் முழுவதுமாக மஞ்சள் நிறமாக காட்சியளித்தார். இந்த ட்வீட்டிக்கு கீழே "ஆரத்திக்கு 2000 குடுக்கல, குவாட்டர்க்கு பணம் தரல, இது நாட்டிற்காக சேர்ந்த கூட்டம்" என்று கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications