தென்காசி மாவட்டமே வேண்டாம்.. தூத்துக்குடியுடன் இணைந்த 12 ஊராட்சிகள்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் வேண்டாம் என்றும் தங்களை தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்றும் 12 ஊராட்சி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து தென்காசி மாவட்ட ஊராட்சி வளர்ச்சி துறயைின் கட்டுப்பாட்டில் உள்ள இளையரசனேந்தல் உள்பட 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதியாக தென்காசி செயல்பட்டு வந்தது. கடந்த 2019 ம் ஆண்டில் தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது.

tenkasi-12-panchayat-merge-with-tuticorin-district-tamil-nadu-government-release-gazette-notificati

இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. தென்காசி மாவட்டத்தின் எல்லை பகுதியாக மேற்கே கேரளா அமைந்துள்ளது. கிழக்கே தூத்துக்குடி, வடக்கே விருதுநகர், தெற்கே திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் எல்லையாக இருக்கின்றன.

இந்நிலையில் தான் தென்காசி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் குருவிக்குளம் ஊராட்சி ஒன்றியம். இது திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்டுள்ளது. இந்த குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ள சில ஊராட்சி மக்கள் தங்களை தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையுடன் இணைக்க வேண்டும் என்று கூறி வந்தனர். இதற்காக போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தான் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டம் குருவிக்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டு இருந்த முக்கூட்டு மலை, நக்கலமுத்தன்பட்டி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, புளியங்குளம், அப்பனேரி, அய்யனேரி, சித்திரம்பட்டி, பிள்ளையார்நத்தம், இளையரனேந்தல்,
இளையரசனேந்தல் லெட்சுமியம்மாள்புரம், ஜமீன்தேவர்குளம் உள்ளிட்டவை தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதில் இளையரசனேந்தல் மட்டும் இரண்டாக இளையரசனேந்தல் எனவும், வெங்கடாச்சலபுரம் எனவும் பிரித்து தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த 12 ஊராட்சிகளும் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில் இனி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் செயல்படும் என்றும், தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இளையரசனேந்தல் வருவாய் கிராமத்தில் உள்ள 12 ஊராட்சிகள் தென்காசி மாவட்டத்தில் உள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என்ற அரசாணை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து 3 மாதத்தில் இந்த ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசு தெரிவித்து இருந்தது. அதன்படி தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் வருவாய் கிராமத்தில் இந்த 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டியில் இருந்து சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளன.ஆனால் ஊரக வளர்ச்சி துறை மட்டும் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து வந்தது. 01.09.2017ம் ஆண்டு தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட போது இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளின் ஊராக வளர்ச்சி துறை தென்காசி மாவட்டத்துடன் தொடரும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என்ற அரசாணை ரத்து செய்ய கோரி தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகலு, ஜெயபிரகாஷ் நாராயணசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் அந்த 12 ஊராட்சிமக்கள் ஹேப்பியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+