சொத்து விற்க உதவி கேட்டவருக்கு வந்த வினை.. ஆட்டயப்போட்ட புள்ளிகள்! சசிகலா புஷ்பா மீது மோசடி புகார்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்ததாக பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் கிங்ஸ்டன். இவர் தூத்துக்குடியில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான 30 சென்ட் இடம் தூத்துக்குடி அருகே உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்பிக் நகர் பகுதியில் உள்ளது. இந்த சொத்தின் மதிப்பு தற்போது சுமார் ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2.5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது தொழிலுக்கு முதலீடு செய்ய பணம் தேவைப்பட்டதால் தனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார் தாமஸ். தனக்கு பழக்கமான தூத்துக்குடி மாவட்டம் உமரி காடு பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன் மற்றும் அவரது நண்பர் மாதவன் ஆகியோரை அணுகி உள்ளார்.
இதற்காக உமரி சத்தியசீலன் மற்றும் மாதவன் ஆகியோர் தாமஸிடம் தலா ரூ.10 லட்சம் பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும், தாமஸ் கிங்ஸ்டன் தனது இடத்தை விற்பனை செய்து தருவதற்காக சத்தியசீலன் மற்றும் மாதவன் ஆகியோருக்கு பவர் எழுதிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், பவர் எழுதிக் கொடுத்து 14 மாதங்களாக இடத்தை விற்பனை செய்யாமல் உமரி சத்தியசீலன் மற்றும் மாதவன் ஆகியோர் இழுத்தடித்து வந்துள்ளனர். இதையடுத்து தாமஸ் கிங்ஸ்டன் தனது இடத்திற்கான ஆவணங்களை திருப்பித் தருமாறு உமரி சத்திய சீலனிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால், உமரி சத்தியசீலன் மற்றும் மாதவன் ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்தும், வாழ்நாள் உறுதிச் சான்றை போலியாக தயார் செய்தும் தாமஸ் கிங்ஸ்டன் வங்கி கணக்கில் ரூ. 80 லட்சம் வரவு வைத்ததாக வங்கி ஆவணங்களை போலியாக தயார் செய்து பாஜக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா பெயருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
இந்த மோசடி தாமஸ் கிங்ஸ்டனுக்கு தெரியவந்ததை தொடர்ந்து உமரி சத்தியசீலன், மாதவன் மற்றும் சசிகலா புஷ்பா ஆகியோரை அணுகி தனது இடத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்து விட்டீர்கள். எனவே, அதற்கு உரிய பணத்தை தாருங்கள் எனக் கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு உமரி சத்தியசீலன், சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் நாங்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. பத்திரப்பதிவை ரத்து செய்ய முடியாது என கூறியதுடன், உனக்கு பணத்தை தர முடியாது என்றும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தாமஸ் கிங்ஸ்டன் பத்திரப்பதிவு சார்பதிவாளர், தூத்துக்குடி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு காவல்துறை உள்ளிட்டோரிடம் மோசடி பத்திரப் பதிவை ரத்து செய்து, மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
மேலும், பாஜக மாநில துணைத் தலைவரான சசிகலா புஷ்பா., பாஜக நிர்வாகிகளான உமரி சத்தியசீலன், மாதவன் ஆகியோர் தமது நிலத்தை அபகரித்து விட்டு, கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
தூத்துக்குடியில் பயங்கரம்.. நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் செய்த அதிரடி சம்பவம்












Click it and Unblock the Notifications