தூத்துக்குடியில் வீட்டு மனை பட்டா.. கோவில்பட்டி தாலுகா ஆபீஸ்ல நிக்கிறது யார் பாருங்க? வாயிலே என்ன?
தூத்துக்குடி: இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக, கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.. என்ன நடந்தது கோவில்பட்டியில்?
வீடற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் சொந்தமாக குடியிருப்பு வசதியை உறுதிசெய்யும் நோக்கில் வருவாய்த் துறை மூலம் தகுதியான பயனாளிகளுக்கு விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டுமனை பட்டாக்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

அதேபோல, புறம்போக்கு நிலங்கள் போதிய அளவு இல்லாவிட்டால், பிற ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களைத் தேர்வு செய்து, கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர்கள் தங்களது அதிகாரத்துக்குட்பட்டு மாற்றம் செய்தும் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.
ஆதி திராவிடர்: இதுதவிர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையால் ஏற்கெனவே கடந்த காலங்களில் நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் பயனாளிகளுக்கு இணையவழியில் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், பாதுகாக்கப்பட்ட வனங்களில் நீண்டகாலமாக குடியிருந்து வேளாண்மை செய்யும் மலைவாழ் மக்கள், பழங்குடியினருக்கு அவர்கள் வசிக்கும், வேளாண்மை செய்து வரும் இடத்துக்கான நில உரிமை பட்டாக்களும் வழங்கப்படுகிறது.
வீட்டு மனைப்பட்டாக்கள்: அதேசமயம், இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் கிடைக்க கோரி, சில இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.. தங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டும் என்று, தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில், பூம்பூம் மாட்டுக்காரர்களும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இந்நிலையில், இன்று கோவில்பட்டியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் கிராமத்தில், பல வருடங்களாகவே, ஏழை எளிய மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.. இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா இதுவரை வழங்கவில்லை.. எனவே, பட்டா வழங்க வேண்டும் என்று கேட்டு பலமுறை தாசில்தாரிடம் மனு கொடுத்துவிட்டார்கள்.. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

மாவட்ட கலெக்டர்: எனவே, மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பெயரில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக ஆய்வாளர் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர்.. அப்படியிருந்தும்கூட, இன்று வரை இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை என்கிறார்கள். அதனால்தான், இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தினார்கள்.
இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் கருப்பன், நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், கோவில்பட்டி நகர செயலாளர் சரோஜா, மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், தாலுகா உதவி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோரிக்கை மனு: முன்னதாக, இந்த போராட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியினருடன் ஏராளமான கிராம மக்களும் திரண்டு வந்தனர். அப்போது, இதற்காக ஒரு கழுதையுடன் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.. தாலுகா அலுவலகம் வாயிலிலேயே, கழுதையை நிற்க வைத்து, அதனிடம் கோரிக்கை மனுவையும் கொடுத்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால், அனுமதி இல்லாமல் இந்த போராட்டம் நடத்தியதால், அனைவரையுமே போலீசார் கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications