தூத்துக்குடி ஆர்டிஓ ஆபீஸுக்கு லுங்கியோடு வந்துட்டாரு.. பாத்ரூமில் கொடுமை தெரியுமா? பரபர கோவில்பட்டி
தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் அதிரடிகள் ஆரம்பமாகியிருக்கிறது.. ஒவ்வொரு மாவட்டத்திலும் ரெய்டுகள் நடத்தப்பட்டு, அதுகுறித்த பரபரப்புகளும் வெளியாகி வருகின்றன.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போலி பத்திரங்களை ஒரிஜினல் போலவே தயார் செய்து, நில மோசடிகள் பெருகி வருகின்றன.. இவற்றை அடியோடு ஒழிக்கும் முயற்சியில் தமிழக அரசும் தீவிரமாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இதற்காகவே, போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு நிறைய முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறது.
நிலமோசடிகள்: ஆனாலும் நிலமோசடிகளில் அதிகாரிகளே சிக்கிவிடுகிறார்கள்.. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே வருகிறது.. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைதாகியும் வருகிறார்கள்.
நேற்றுகூட காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள்.. அதுவும் இரவு நேரத்தில் ரெய்டு நடந்துள்ளது.. அந்த நேரத்தில் மழை பெய்து, கரண்ட்டும் போயுள்ளது. ஆனாலும், அதிகாரிகள் ஒரு இடம் விடாமல் அலசி ரெய்டு நடத்தினார்கள். கணக்கில் வராத லட்சக்கணக்கான பணத்தையும் பறிமுதல் செய்துகொண்டு போனார்கள்.
கோவில்பட்டி: அதுபோலவே, கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் ஒரு அதிரடி சம்பவம் நடந்துள்ளது.. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை சாயங்காலம் வரை நீடித்தது... அங்கிருந்த அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் சரிபார்த்தனர்.
நேற்றிரவு சோதனையின்போது ஆர்டிஓ ஆபீஸ் பணியாளர்கள் மற்றும் புரோக்கர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 910ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
பாத்ரூம்: இந்த ரெய்டு நடப்பதால், பாத்ரூமிலும் பணத்தை அள்ளி வீசப்பட்டது.. ஆனால், கழிவறையில் வீசப்பட்டிருந்த பணத்தையும் போலீசார் கைப்பற்றிவிட்டார்கள். இதுதொடர்பாக கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியப்பாண்டியன் மற்றும் அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதில் ஹைலைட் என்னவென்றால், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், காக்கி சட்டை மற்றும் லுங்கியுடன் ஆபீசுக்குள் நுழைந்தார்களாம்.. அதாவது ஆட்டோ டிரைவர்கள் போல மாறுவேடத்தில் வந்திருக்கிறார்கள்.. அதனால்தான், அவர்களை உடனடியாக அங்கிருந்தவர்களால் அடையாளம் காண முடியவில்லை.. கொஞ்ச நேரம் கழித்துதான், அவர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் என்பது தெரிந்து அதிர்ந்து நின்றுவிட்டார்களாம்...!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
தூத்துக்குடி ரூ.18000 கோடி கப்பல் முதலீடு ஆந்திராவுக்கு கைநழுவியது ஏன்? வெள்ளை அறிக்கை தேவை: ராமதாஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications