எறும்பு பொடியை எடுத்து.. அதுவும் வெறும் 5 ஓட்டுக்காக.. தூத்துக்குடியை அதிர வைத்த பெண் வேட்பாளர்
அமமுக பெண் வேட்பாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்
தூத்துக்குடி: தேர்தலில் தோல்வியடைந்ததை தாங்கி கொள்ள முடியாமல் அமமுக பெண் வேட்பாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இப்படித்தான் விருதுநகர் மாவட்டத்திலும் ஒரு துயர சம்பவம் நடந்தது.. சாத்தூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் சுகுணா.. 52 வயதாகிறது.. கணவர் பெயர் நாகராஜ்.. 58 வயதாகிறது.
இவர் சாத்தூர் நகராட்சியில் மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார்... சுகுணா சாத்தூர் நகராட்சி 19வது வார்டில் அதிமுக சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவும் ஏற்று கொள்ளப்பட்டது.

அமமுக - அதிமுக
எனவே தீவிர பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்.. இவரது வெற்றிக்கு கணவர் நாகராஜ் தீயாய் வேலை பார்த்தார்.. இந்நிலையில் நேற்றைய தினம் ஓட்டுகள் எண்ணும்படி ஆரம்பமானது.. சாத்தூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் 18 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வென்றனர்... அதிமுக ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.. ஆனால், 19வது வார்டில் போட்டியிட்ட சுகுணா தோல்வியை தழுவினார்...

சுகுனா
இந்த வார்டில் மொத்தம் 930 வாக்குகள் பதிவானது. இதில் சுகுணா 215 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சுபிதாவிடம் தோல்வியடைந்தார். இதனால் சுகுணாவும், அவரது கணவர் நாகராஜூம் அதிர்ச்சி அடைந்தனர்.. நாகராஜோ, திடீரென்று விஷத்தை எடுத்து குடித்துவிட்டார்.. இதை பார்த்து பதறபோன சுகுனாவும் குடும்பத்தினரும் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. ஆனாலு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. அப்படித்தான் அமமுக பெண் வேட்பாளர் ஒருவரும் விஷத்தை குடிக்க முயன்றுவிட்டார்.

எண்ணிக்கை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர் மற்றும் எட்டையபுரம் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கு எட்டையபுரத்தில் உள்ள, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் பேரூராட்சி 8-வது வார்டில், அமமுக சார்பில் போட்டியிட்ட ராமஜெயம் என்ற பெண் வேட்பாளர் 5 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.

தீவிர சிகிச்சை
இதனால் மனமுடைந்த ராமஜெயம், தேர்தலில் படுதோல்வியடைந்த அதிர்ச்சியில் எறும்பு பொடியை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்... இதை குடும்பத்தில் இருந்தவர்கள் பார்த்துவிட்டதால், உடனடியாக எறும்புப்பொடி சாப்பிட்ட ராமஜெயத்தை மீட்டு சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்... இப்போது அவருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.. தேர்தலில் தோல்வியடைந்த காரணத்திற்காக வேட்பாளர்கள் தற்கொலை செய்து கொள்வதும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications