தங்க தாலியை கழட்டிய தூத்துக்குடி பார்வதி.. திருச்செந்தூரில் கூலிங் கிளாஸுடன் வந்த கற்பனை ஆண்? எப்படி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூரில் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைந்த திருடன், பார்வதியின் தாலி வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.. இதனால் பதறிப்போன பார்வதி, தாலியை கழட்டி திருடனிடம் தந்துள்ளார்.. இதுகுறித்த விசாரணையை போலீசார் நடத்தியபோதுதான், உண்மை குற்றவாளியை வெளிச்சத்துக்கு கொண்டுவர் முடிந்தது.. என்ன நடந்தது தூத்துக்குடியில், யாரிந்த திருடன்? பார்வதி?

திருச்செந்தூர் குமாரபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு 38 வயதாகிறது.. வெல்டிங் பட்டறை வைத்திருக்கிறார்.. இவரது மனைவி பெயர் பார்வதி.. இந்த தம்பதிக்கு ஸ்ரீதேவ் (8) மற்றும் இரண்டரை வயதில் ஆதிரா என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது பள்ளி விடுமுறை என்பதால், ஸ்ரீ தேவ் முக்காணியில் உள்ள பெரியசாமியின் பெற்றோர் வீட்டில் தங்கியிருக்கிறார்.

Tiruchendur Thoothukudi Manjal Thali

மூச்சு பேச்சில்லை

இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை பெரியசாமி வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார்.. பார்வதி, குழந்தை ஆதிராவுடன் வீட்டில் படுத்திருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், குழந்தையின் கழுத்தை நெரித்தவாறு, பார்வதியின் தாலியை கத்தி முனையில் மிரட்டி சென்றுள்ளனர்.

பிறகு குழந்தை மூச்சு பேச்சில்லாமல் கிடந்தது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சொல்லி உள்ளனார்.

கறுப்பு சட்டை, கூலிங் கிளாஸ்

இதையடுத்து போலீசார், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை கையில் எடுத்தனர்.. பார்வதியிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டதற்கு, "கறுப்பு சட்டை, கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு, வீட்டின் சுவர் ஏறி குதித்து மர்ம நபர் வீட்டுக்குள் வந்தார்.. குழந்தையின் கழுத்தை நெரித்தவாறே, என்னுடைய தாலி செயினை தருமாறு கேட்டார்.

பிறகு குழந்தையின் முகத்தில் துணியை வைத்து அமுக்கினார்.. இதில் நான் பயந்துபோய், கழுத்தில் கிடந்த செயினை கழற்றி தந்துவிட்டேன்.. அப்போது திடீரென குழந்தை பேச்சு, மூச்சு இல்லாமல் போய்விட்டது.. உடனே அந்த மர்ம நபர் குழந்தையையும், செயினையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்" என்றார்.

பட்டப்படிப்பு படித்த பார்வதி

ஆனால், பார்வதியின் இந்த வாக்குமூலத்தை போலீசார் நம்பவில்லை.. போலீசாருக்கு பார்வதி மீது சந்தேகம் எழுந்தது. எனவே, இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.. அப்போதுதான் பார்வதி பற்றின பல்வேறு விவரங்கள் வெளியாகியின.

அதாவது முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்கிறாராம் பார்வதி.. ஆனால், படிக்காத பெரியசாமியை பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில் விரக்தியடைந்த பார்வதி, மனநலம் பாதிக்கப்படும் அளவுக்கு சென்றுள்ளார்.. கடந்த ஒன்றரை வருடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்திருக்கிறார்.

பார்வதியின் கல்மனம்

கடந்த சில நாட்களாகவே அதிகமாக மன நிலை பாதிக்கப்பட்டு கணவருடன் சண்டை போடுவதும், பொருட்களை உடைப்பதுமாக இருந்துள்ளார். இந்த நிலையில்தான், சம்பவத்தன்று விளையாட்டு சாமான் கேட்டு அழுதிருக்கிறாள் குழந்தை. அப்போது, குழந்தையை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதனால், பார்வதி தன்னுடைய குழந்தையின் கழுத்தை நெரித்துள்ளார். குழந்தை துடித்து அழுவதை பார்த்ததுமே, அந்த முயற்சியை பார்வதி கைவிட்டுள்ளார். ஆனாலும், குழந்தை அப்போதே இறந்துவிட்டது.. இவ்வளவும் போலீசாரின் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.. இப்போது பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பார்வதியிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

நகைக்காக இரண்டரை வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பெற்ற தாயே குழந்தையின் கழுத்தை நெரித்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+