Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவப்பு மண்ணில் பரவசமூட்டும் கள்ளர் வெட்டுத் திருவிழா! தூத்துக்குடி கற்குவேல் அய்யனார் கோயில் மகிமை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தேரிக்குடியிருப்பு, கற்குவேல் அய்யனார் கோயில் கள்ளர் வெட்டுத் திருவிழா வெகு சிறப்பாக தூத்துக்குடியில் துவங்கி உள்ளது.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து புனிதமண்ணை இங்கிருந்து எடுத்து செல்வது வழக்கமாகும்.. இந்த புனித மண்ணை பிரசாதமாக பக்தர்கள் எடுத்து செல்ல காரணம் என்ன? தேரிக்காடு கற்குவேல் அய்யனார் கோவில் எப்படி தோன்றியது?

தேரிக்காடு கற்குவேல் அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் கள்ளர் வெட்டு திருவிழா மிகவும் பிரபலமானதாகும்.

தூத்துக்குடி சாயர்புரம் பகுதியிலிருந்து நெல்லை திசையன்விளை வரை உள்ள பாலை பகுதிக்கு தேரிக்காடு என்பார்கள்.. இங்குள்ள கற்குவேல் அய்யனார் கோவில் நடக்கும் கள்ளர் வெட்டு திருவிழாவானது, தேரி காட்டில் நடக்கும்.


கற்குவேல் அய்யனார் எப்படி தோன்றினார்

இங்குள்ள கற்குவேல் அய்யனார் எப்படி தோன்றினார் தெரியுமா? ஒரு ராஜா தான் சாப்பிட வளர்த்து வந்த மாமரத்தில் இருந்து ஒரு பழம், விதவை பெண்ணின் தண்ணீர் குடத்தில் விழுந்துவிட்டதாம்.. ஆனால் அந்த பழத்தை விதவையும் கவனிக்கவில்லை.

இதனிடையே பழத்தை தேடுமாறு வீரர்களுக்கு ராஜா கட்டளை இடவும், இறுதியில் விதவையின் குடத்திலிருந்து அந்த மாம்பழம் கண்டெடுக்கப்பட்டது. இதனால் அமைச்சர் அய்யனாரின் பேச்சையும் மீறி, அப்பெண்ணுக்கு ராஜா தண்டனையை தந்துவிட்டார். இதனால் அந்த விதவை சாபம் விடவும், அந்த ஊரே அழிந்துவிட்டது. அங்கிருந்த கருக்குவேல் மரத்தினடியில் ஒளிந்து கொண்ட அய்யனார் மட்டும் உயிர் பிழைத்தார்.

தேரிக்குடியிருப்பு அய்யனார்

பிறகு பல காலம் கழிந்து, தேரிக்குடியிருப்பு பகுதியிலிருந்தவர்கள், அங்கிருந்த ஒரு மரம் தடுக்கி கீழே விழுந்தபடி இருந்தனர். எனவே அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்த முயன்றபோது, மண்ணிலிருந்து ரத்தம் வந்துள்ளது. அப்போது, "நான்தான் அய்யனார்.. இங்கு பல வருடமாக இருந்து, உங்களை காத்து வருகிறேன், கோவில் கட்டி என்னை வணங்குங்கள்" என்று கேட்டுக் கொண்டதாம். அப்படி உருவானதுதான் இந்த கற்குவேல் அய்யனார் கோவில் என்கிறார்கள்.

அதேபோல அய்யனார் கோவிலில் பாதுகாத்து வைத்த நகைகளை ஒருவர் திருடிவிட்டாராம். அந்த திருடரை அங்குள்ள காவல் தெய்வம் வெட்டியதாகவும், அந்த ரத்தம் தெறித்ததால் அப்பகுதியே சிவப்பாக மாறிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

சிவப்பு மண்

அதாவது அய்யனாரின் படைத்தளபதியான வன்னியராஜா வெட்டிவிட்டாராம்.. இந்நிகழ்ச்சிக்குதான் கள்ளர்வெட்டு என்று பெயர்.. அப்போதிருந்துதான் காலம் காலமாக இந்த கள்ளர் வெட்டு திருவிழா நடந்து வருகிறதாம்.அநீதியை அழித்து நீதியை அய்யனார் நிலைநாட்டிய நாளே கள்ளர் வெட்டுத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தற்போது கள்ளருக்கு பதிலாக செவ்விளநீரை கயிற்றால் கட்டி வெட்டுவதுடன், இளநீர் பட்ட மண்ணை பக்தர்கள் புனிதமண்ணாக எடுத்து செல்கிறார்கள்..

காரணம், இந்த மண்ணை விவசாய நிலத்தில் தூவினால் விவசாயம் செழிக்கும், பூஜை அறையில் வைத்து வணங்கினால் செல்வம் பெருகும், வீட்டு வாசலில் கட்டினால் எந்தத் துன்பமும் நேராது என்பது நம்பிக்கையாகும்.

திருவிழா

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான திருவிழாவும் ஆரம்பமாகி உள்ளது. நேற்று காலை 10 மணிக்கு யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது..

இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக அடுத்தமாதம்(டிசம்பர்) 14-ந் தேதி பகல் 11 மணிக்கு ஐவராஜா, மாலையம்மன் பூஜையும், பகல் 12 மணி, மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆரானையும், இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையும் நடக்கிறது.

டிசம்பர் 15-ந் தேதி காலை 10 மணிக்கு மகளிர் வண்ணக் கோலமிடும் நிகழ்ச்சியும், காலை 11 மணி, பகல் 12 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலியும், இரவு 7.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறும். இரவு 9 மணிக்கு உற்சவர் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

சிவப்பு மண்ணில் கள்ளர் வெட்டு

டிசம்பர் 16-ந் தேதி காலை 6 மணிக்கு கற்குவேல் அய்யனாருக்கு அபிஷேக பால் குடங்கள் ஊர்வலமும், காலை 7 மணிக்கு பேச்சியம்மன் உற்சவர் ஊஞ்சல் சேவை, காலை 9 மணிக்கு அன்னை பூர்ண பொற்கலை சமேத கற்குவேல் அய்யனார், பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தாமிரபரணி தீர்த்தம் எடுத்து வரப்படும்.

காலை 9.45 மணிக்கு ஊர் எல்லையில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 4.45 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் பிரசித்திப் பெற்ற கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+