கொட்டிய மழையில் குடையுடன் களமிறங்கிய தூத்துக்குடி மேயர்! 3 மணி நேரத்தில் காணாமல் போன தேங்கிய நீர்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: கொட்டிய மழையில் குடையை பிடித்துக்கொண்டு களமிறங்கிய தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, நகரின் சில பகுதிகளில் தேங்கி நின்ற மழைநீரை இயந்திரங்கள் மூலம் சில மணி நேரங்களில் வெளியேற்றி இருக்கிறார்.

தூத்துக்குடி மாநகரில் எந்தப் பகுதியிலும் தண்ணீர் தேங்கி நின்றுவிடாமல் அவர் மிக கவனமாக பார்த்துக் கொள்கிறார். இதற்கு காரணம் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் எந்த வகையிலும் திமுக மீது அதிருப்தி கொள்ளக் கூடாது என்பதாலும் எல்லாவற்றுக்கும் மேலாக கனிமொழி தூத்துக்குடியில் மீண்டும் களம் காண உள்ளதாலும் மேயர் ஜெகன் துரிதமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

Tuticorin Mayor Jagan Periyasamy, holding an umbrella in the pouring rain, has been inspection in city

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி விடுத்துள்ள பதிவு வருமாறு;

''முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பெய்த மழையை தொடர்ந்து பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வின் போது கடந்த காலங்களில் மழை நீரினால் மிகவும் பாதிப்படைந்த பழைய மாநகராட்சி அலுவலகம், பிரையன்ட் நகர், அம்பேத்கார் நகர், எஸ்கேஎஸ்ஆர் காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, ராஜீவ் நகர் போன்ற அநேக பகுதிகளில் மின் மோட்டர் இல்லாமல் புதிதாக கட்டிய வடிகால்களில் வாட்டத்தில் நீர் செல்வதால் அந்த பகுதிகளில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tuticorin Mayor Jagan Periyasamy, holding an umbrella in the pouring rain, has been inspection in city

மேலும் தற்பொழுது நீர் தேங்கிய பகுதிகளில் உடனடியாக நீரானது அப்புறப்படுத்தப்பட்டும் சாலை ஓரங்களில் உள்ள கேட்ச் பிட்ஸ்ல் நீர் செல்வதற்கு வழி செய்யப்பட்டும் வருகின்றது, வருங்காலங்களில் இதற்கும் தீர்வுகள் காணப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+