Thoothukudi: தூத்துக்குடி மாணவி கொலையில் கைதான கொடூரனுக்கு திடீர் உடல்நலக் குறைவு!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் போலீஸார் அழைத்துச் சென்றனர்.
விளாத்திக்குளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது பிளஸ் 2 மாணவி. இவர் கடந்த 10 ஆம் தேதி தேர்வுக்கு படித்துவிட்டு இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள காட்டு பகுதிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் மாணவி நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் அந்த காட்டுப் பகுதியில் தேடிய போது அவர் அங்கு பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார்.
அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள், பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற மறுத்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவரை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் அந்த கிராமத்திற்கு அசலூரார் யாராவது வந்திருக்கிறார்களா என போலீஸார் தேடினர்.
அப்போது அங்குள்ள காற்றாலையில் உள்ள சிசிடிவியை சோதனை செய்த போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து சென்றது தெரியவந்தது. அந்த மோட்டார் சைக்கிளில் உள்ள பதிவெண்ணை கொண்டு விசாரித்த போது அவது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவருடையது என தெரியவந்தது.
அவரிடம் விசாரித்த போது தனது பைக்கை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்த நகலை காட்டினார். இதையடுத்து அந்த சிசிடிவியில் பதிவான காட்சியை வைத்து அந்த நபரை தேடினர். அப்போதுதான் அவர் சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் என்கிற தர்ம முனீஸ்வரன் (30) என தெரியவந்தது.
விசாரணையில் அவர் மீது ஏராளமான வழக்குகள் இருப்பதும் 2020 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார் என்றும் தெரியவந்தது. இந்த வழக்கில் தர்ம முனீஸ்வரனை கைது செய்த போலீஸார், அவரை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தர்ம முனீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் ஜாமீனில் வெளியே வந்தார். நீதிமன்ற உத்தரவின்படி அவர் தினந்தோறும் தூத்துக்குடி மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
இது போல் கையெழுத்து போட வந்த போதுதான் அந்த மாணவியை கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலையை தர்ம முனீஸ்வரன் மட்டும் செய்தாரா, இல்லை அவருடன் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்து போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் விசாரணைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications