நாலு சுவத்துக்குள்ள.. காதலனுடன் சிறுமி! எட்டிப் பார்த்த மூன்றாம் கண்! நண்பர்கள் செய்யும் வேலையா இது?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டியதாக இளைஞர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காதலிப்பதாக கூறிய சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த காதலனும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே பெண்கள் குறிப்பாக 18 வயது உட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. விருதுநகர், சென்னை, திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தூத்துக்குடியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்.

Tuticorin crime pocso

காதலிப்பதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றி நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டியதாக காதலன் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன் மடம் அருகே வசிக்கும் 21 வயதான வசந்த் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பேசி பழகியுள்ளார்.

முதலில் இன்ஸ்டாகிராம் மூலம் பேசிய அவர் தொடர்ந்து சிறுமியின் செல்போன் எண்ணைப் பெற்று அடிக்கடி பேசியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிறுமியை காதலிப்பதாக கூறிய அந்த இளைஞர் கடந்த 2023 ஆம் ஆண்டு காமராஜ் நகர் பகுதியில் இருக்கும் தனது உறவினரின் வீட்டுக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்றிருக்கிறார். தொடர்ந்து அங்கு வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கும் வசந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து அவருடன் பேசுவதை சிறுமி தவிர்த்து இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி வீட்டில் இருந்த போது அங்கு வசந்தின் நண்பனான பொன் முத்துக்குமார் என்பவர் சென்றிருக்கிறார். அப்போது அந்தச் சிறுமி வசந்துடன் தனியாக இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் அதனை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி இருக்கிறார்.

மேலும் கடந்த 26 ஆம் தேதி சிறுமியின் வீட்டுக்குச் சென்ற வசந்தின் மற்றொரு நண்பனான மதன் குமார் குடிபோதையில் தகராறு செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் வசந்த்துடன் நீ தனியாக இருந்த வீடியோ என்னிடம் இருக்கிறது அதை எனது நண்பர்கள் பலருக்கும் அனுப்பி வைத்திருக்கிறேன் என கூறி மிரட்டி இருக்கிறார். மேலும் தான் சொல்வது போல கேட்காவிட்டால் வீடியோவை இணையதளங்களில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த அந்த சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். தொடர்ந்து பெற்றோர் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் வசந்த் அவரது நண்பர்களான பொன் முத்துக்குமார், மதன்குமார், சக்தி குமார், பொன் மாடசாமி, 17 வயது சிறுவன் உள்ளிட்ட ஆறு பேர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+