ஜெகஜால கில்லாடி கங்காதேவி.. தூத்துக்குடியே ஆடிப்போச்சு.. இவரது ஒரே லட்சியம் என்ன தெரியுமா? ஓ மை காட்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி போலீஸையே மிரள வைத்திருக்கிறார் கங்காதேவி.. என்ன காரணம்? யார் இவர்?
தூத்துக்குடி மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் கங்காதேவி... 12ம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறார். ஆனால் யாரை பார்த்தாலும், காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதாக சொல்லி உள்ளார்.

ஐபிஎஸ் லட்சியம்: இதற்காகவே, போலீஸ் அடையாள அட்டை தன்னிடம் உள்ளதாகவும் சொல்லி வந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கங்காதேவி, ஐபிஎஸ் ஆவதே தன்னுடைய ஒரே லட்சியம் என்றும் பதிவிட்டுள்ளார்..

Tuticorin Thoothukudi

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடன் பள்ளியில் படித்த தோழியை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். தூத்துக்குடி மேற்கு காமராஜர் நகர் பகுதியில், தோழியின் வீடு உள்ளது.. தோழியின் அம்மா கிருஷ்ணவேணியிடமும், தான் சென்னையில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருவதாகவும், என்கவுண்டர் கேஸ் விஷயமாக தூத்துக்குடிக்கு வந்திருப்பதால், 2 நாட்கள் வீட்டில் தங்கி செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

கிருஷ்ணவேணி: பெண் போலீஸ் என்பதாலும், டியூட்டி விஷயமாக வந்திருப்பதாலும், கிருஷ்ணவேணியும் தன்னுடைய வீட்டில் கங்காதேவியை தங்க அனுமதி தந்தார்.. 2 நாட்கள் தங்கியிருந்த கங்காதேவி, கிளம்பி போகும்போது, வீட்டிலிருந்த தாலி, உட்பட 2,000 ரூபாய் பணத்தை சுருட்டிக் கொண்டு போயுள்ளார்.. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணவேணி, தாளமுத்து நகர் போலீசில் புகார் தந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசாரும் கங்காதேவியை தேட ஆரம்பித்தனர்.

ஆனால், கங்காதேவியோ, இன்னொரு தோழியின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.. கடந்த வெள்ளிக்கிழமை தாய்நகர் சுனாமி காலனி பகுதியில் வசித்து வரும் வளர்மதி என்ற தோழியின் வீட்டிற்கு கங்காதேவி சென்றுள்ளார்.

2000 ரூபாய் பணம்: வளர்மதியிடம், தன்னை ஒரு சப் இன்ஸ்பெக்டர் என்று சொல்லி, வேலை விஷயமாக 2 நாள் நாட்கள் தங்கி செல்ல அனுமதி வேண்டும் என்று கேட்டுள்ளார். வளர்மதியும் தங்க அனுமதித்துள்ளார்.. 2வது நாள் வளர்மதியின் பர்ஸில் வைத்திருந்த 2,000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கங்காதேவி தப்பி சென்றுள்ளார். இது தொடர்பாக தாளமுத்து போலீசில் வளர்மதியும் புகார் அளித்துள்ளார்.

Tuticorin Thoothukudi

2 புகார்களிலும் கங்காதேவியின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்து போலீசார் அதிர்ந்தனர்.. இதையடுத்து, தீவிரமான தேடுதல் வேட்டையை துவங்கினர்..

அதிரடி கைது: நேற்றைய தினம், மேட்டுப்பட்டி பள்ளிவாசல் அருகே பைக்கில் கங்காதேவி சென்று கொண்டிருந்தாராம். அவரை பார்த்ததுமே, வளர்மதியும் அவரது கணவரும் வளைத்து பிடித்து தாளமுத்து நகர் போலீசில் ஒப்படைத்தனர். இப்போது கங்காதேவி கைதாகியிருக்கிறார்.. ஆனால், இதுபோல் இன்னும் எத்தனை பேரிடம் திருடியிருக்கிறார்? என்னென்ன திருடப்பட்டுள்ளது என்ற விசாரணையில் போலீசார் ஈடுபட்டுவருகிறார்கள்.

எப்போதுமே போலீஸ் உடையில்தான் சுற்றித் திரிவாராம் கங்காதேவி.. சென்னை அல்லது செங்கல்பட்டில் காவல்துறையில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருவதாக சொல்வதே இவரது வாடிக்கையாக உள்ளது.

அபேஸ்: வளர்மதி வீட்டில் தங்கும்போது, "ஒரு குற்றவாளியை துரத்தி பிடிக்கும்போது தன்னுடைய தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது, அதனால், இரண்டு நாட்கள் தங்கிக்கொள்கிறேன்" என்று அனுமதி கேட்டாராம். அப்போது வளர்மதி வீட்டிலிருந்து பீரோவில், பர்ஸில் வைத்திருந்த 5000 ரூபாய் பணத்தில் 2000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+