தூத்துக்குடி பயங்கரம்.. மது வாங்க பணம் தராத நண்பன்.. உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்த இளைஞர்
தூத்துக்குடி: மது வாங்க பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த இளைஞர் தனது நண்பனை உறவினர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் 200 ரூபாய் பணம் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'உன் நண்பனை காட்டு; நீ யார் என சொல்கிறேன்' என ஒரு பழமொழி உண்டு. இது நூற்றுக்கு நூறு உண்மை. எத்தகைய நண்பர்களுடன் நாம் பழகுகிறோமோ, அவர்களின் குணாதிசயங்கள் நமக்கு வந்துவிடும். அதனால்தான், "சேருமிடம் அறிந்து சேர்"; "கூடா நட்பு கேடாய் முடியும்" போன்ற பழமொழிகளை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். ஏனெனில், தீய குணமுடைய நண்பர்கள் சில நேரங்களில் நமக்கே
ஆபத்தாக மாறி விடுவர். அப்படியொரு சம்பவம்தான் தூத்துக்குடியில் நடந்துள்ளது.

நண்பர்கள் அதிகம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மஞ்சநம்பிகிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுதுரை (28). இவர் அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். மேலும், புதிய தமிழகம் கட்சியின் கிளைச் செயலாளராகவும் அழகுதுரை இருந்து வந்தார். இவருக்கு அந்தப் பகுதியில் நண்பர்கள் அதிகம் எனக் கூறப்படுகிறது. இவர் வீட்டுக்கு நண்பர்கள்
வருவதும், இவர் தனது நண்பர்களின் வீட்டுக்கு செல்வதும் வாடிக்கையாக இருந்துள்ளது.

"மது வாங்க பணம் தா.."
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை செட்டிக்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அழகுதுரை சென்று மது வாங்கியதாக தெரிகிறது. அப்போது அங்கு அழகுதுரையின் நண்பர் கனகராஜ் (30) என்பவர் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அழகுதுரையை பார்த்ததும் கனகராஜ் அவரை அழைத்து பேசினார். அப்போது தனக்கு மது வாங்க 200 ரூபாய் பணம் தருமாறு அழகுதுரையிடம் கனகராஜ் கேட்டார். இதற்கு
தன்னிடம் பணம் இல்லை என அழகுராஜ் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர்.

வெட்டிக் கொலை
இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ், அன்றைய தினம் இரவே தனது நண்பர்களுடன் சேர்ந்து அழகுதுரை வீட்டுக்குச் சென்றார். அங்கு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கனகராஜும், அவரது உறவினர்களும் சேர்ந்து அழகுதுரையை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.
இதில் சம்பவ இடத்திலேயே அழகுதுரை உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து அழகுதுரையின் உடலை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது நடவடிக்கை
மேலும், அழகுதுரையை கொலை செய்த கனகராஜ், அவரது நண்பர் ஸ்டாலின், உறவினர்கள் மாடசாமி, பட்டுராஜ், பால்பாண்டி ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்தக் கொலையில் தொடர்புடையே இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். மது வாங்க பணம் தராததற்காக நண்பனையே இளைஞர் கொலை செய்த
சம்பவம் தூத்துக்குடியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications