பட்டு வேட்டி, சட்டையுடன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஜய் சாமி தரிசனம்.. பின்னணி என்ன?
தூத்துக்குடி: தவெக தலைவர் விஜய் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். பட்டு வேட்டி, சட்டையுடன் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த விஜய்க்கு, கோயில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதோடு, வெற்றிவேல் வழங்க கெளரவிக்கப்பட்டது. இதையடுத்து கடற்கரையிலும் விஜய் சாமி தரிசனம் செய்தார்.
சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. அதற்கு முன்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் சென்று ஓய்வெடுத்து வருகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துபாய்க்கு குடும்பத்தினருடன் விடுமுறைக்கு சென்றுள்ளார்.

மறுபக்கம் அதிமுக நிர்வாகிகள் பலரும் கோயில் வழிபாடுகள் மற்றும் ஓய்வை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று அதிகாலை அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழிபாடு நடத்தி இருக்கிறார். இதற்காக நேற்றிரவே சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக மதுரை வந்தடைந்தார்.
இன்று அதிகாலை சாலை மார்க்கமாக புறப்பட்ட விஜய், திருச்செந்தூர் வந்தடைந்தார். அங்கு அவருக்கு தவெக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய் வருகையால் திருச்செந்தூர் கோயிலில் அதிகாலை 4 மணியளவிலேயே பெரிய கூட்டம் கூடியது. விஜய்யை காண்பதற்கு அவரது ரசிகர்களும், பொதுமக்களும் முண்டியடித்ததால், அப்பகுதியில் மிகப்பெரிய நெரிசல் ஏற்பட்டது.
பட்டு வேட்டி, பட்டு சட்டையில் வந்திருந்த விஜய், சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். விஜய்க்கு கோயில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதோடு, வெற்றிவேல் வழங்கியும் கெளரவிக்கப்பட்டார். இதன்பின் கடற்கரையிலும் விஜய் வழிபாடு செய்தார். விஜய்யின் திடீர் வருகையால் திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், விஜய் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. விஜய்யுடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அவரின் மேனேஜர் ஜெகதீஷ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
-
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
மின் வெட்டை தடுக்க களமிறங்கும் 10 சிறப்பு குழுக்கள்.. பறக்கும் 125 மின் தடை நீக்க ரோந்து வாகனங்கள்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications