சாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் 7 வயது சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் வர்த்தகரான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொடூரமாக தாக்கப்பட்டு மரணமடைந்தனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது.

Two teens arrest for rape, murder of 7 year old girl in TN

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சாத்தான்குளத்தில் நெஞ்சை பதற வைக்கும் இன்னொரு கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.

Two teens arrest for rape, murder of 7 year old girl in TN

சாத்தான்குளம் அருகே கல்விளை பகுதியில் 7 வயது சிறுமி கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில் தண்ணீர் டிரம் ஒன்றில் சடலமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

7 வயது சிறுமியை காமுகர்கள் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்பது ஊர் மக்களின் புகார். இதன் அடிப்படையில் முத்தீஸ்வரன் மற்றும் நித்தீஸ்வரன் ஆகிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Two teens arrest for rape, murder of 7 year old girl in TN

தாயிடம் மிட்டாய் வாங்கி வருவதாக ரூ10 வாங்கிச் சென்ற சிறுமி சிதைக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+