தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தெம்மாடி காற்றே.." காலை தூக்கி கண்றாவியாக டான்ஸ்.. திடுக்கிட்டு பார்த்த தூத்துக்குடி

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: இணையத்தில் வைரலாகி வரும் "தெம்மா தெம்மா தெம்மாடி காற்றே" பாடல் டிரெண்ட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2-3 வருடங்களாக ஷார்ட் வீடியோக்கள் மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. எந்த படத்தில் பாட்டு ஹிட் ஆனாலும் அதை வைத்து உடனே இன்ஸ்ட்டா ரீல்ஸ் செய்வது, ஷார்ட் வீடியோ செய்வதுதான் டிரெண்டிங். இந்த டிரெண்டிங் என்பது வாரம் வாரம் மாறும். சில சமயங்களில் பிரபலமான பாடல்கள் டிரெண்டாகும்.

சமீபத்தில் வெளியான ரஞ்சிதமே பாடல் போன வாரம் வரை இணையத்தில் டிரெண்டாகிக்கொண்டு இருந்தது. இதை வைத்து நெட்டிசன்கள் பலர் ரீல்ஸ் போட்டு வந்தனர்.

இந்த ரீல்ஸ் காலத்தில் பாடல்கள் டிரெண்டாக மொழிகள் அவசியம் கிடையாது.

ரீல்ஸ் உலகம்

ரீல்ஸ் உலகம்

தமிழ் பாடல்கள் பல இந்தியா முழுக்க டிரெண்டாகி இருக்கின்றன. ஹலமாதி ஹபீபோ பாடல் உலகம் இப்படி ரீல்ஸ் மூலம்தான் டிரெண்ட் ஆகி உள்ளன. இந்த ரீல்ஸ் காலத்தில் பல வகையான வீடியோக்கள் தினமும் ஹிட் அடிக்கின்றன. உதாரணமாக கரை வந்த பிறகே பிடிக்குது கடலை பாடலை வைத்து பல ஆயிரம் டிராவல் வீடியோக்கள் ரீலிஸில் வெளியாகி இருக்கின்றன. இந்தி பாடல்கள் பலவற்றை வைத்தும் இப்படி ரீலிஸ் டிரெண்டாவது வழக்கம். சில சமயங்களில் வடிவேலு காமெடி வசனங்களை வைத்தும் ரீல்ஸ் போடப்படும்.

டிரெண்ட்

டிரெண்ட்

டான்ஸ் வீடியோக்கள் மட்டுமின்றி பைக்கில் வேகமாக செல்வது, சாலையில் சாகசம் செய்வது, தங்களுக்கு இருக்கும் வேறு வேறு திறமைகளை வெளிப்படுத்துவது, காமெடி செய்வது என்று பல வகையான வீடியோக்கள் ரீல்ஸில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் பாட்டுதான் மலையாள படமான rain rain come again படத்தில் வந்த தெம்மாடி காற்றே பாடல். இந்த பாடல் டிரெண்டாவது பற்றி பார்க்கும் இந்த பாடல் பற்றி பார்க்க வேண்டும். 2001ல் தமிழில் பிரஷாந்த் நடிப்பில் வந்த படம் சாக்லேட். இந்த படத்தில் மல மல மருதமலை என்று பாடல் ஹிட் ஆனது.

டான்ஸ் வீடியோ

டான்ஸ் வீடியோ

லேடிஸ் ஹாஸ்டலில் பெண்கள் ஜாலியாக இருப்பது போல இந்த பாடல் அமைக்கப்பட்டு இருக்கும். அப்போது துண்டு வைத்து டான்ஸ் ஆடுவது கூட டிரெண்டானது. அதே சமயம் இந்த பாடலுக்கு இந்து அமைப்புகள் பல அப்போது எதிர்ப்பு தெரிவித்தன. கடவுள் முருகனின் மருதமலை பாடலை அவமதித்துவிட்டதாக இந்த பாடலுக்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதையடுத்து அந்த பாடலில் கூட சில வார்த்தைகள் செய்யப்பட்டன. இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் தேவா. அதன்பின் 2004ல்தான் rain rain come again படம் மலையாளத்தில் வந்தது.

ஹாஸ்டல்

ஹாஸ்டல்

ஜெஸ்ஸி பிங்க் இசையில் வந்த இந்த படத்தில் தெம்மாடி காற்றே பாடல்.. இதே மருதமலை பாடல் ட்யூனை வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இதுவும் ஒரு கல்லூரியில் நடக்கும் கதைதான். தெம்மாடி என்றால் கெட்ட வார்த்தை எல்லாம் கிடையாது. ஒரு ஆளை மோசமானவன், கெட்டவன், ஆபாசமானவன் என்று திட்டவேண்டும் என்றால் இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள். இந்த வார்த்தையை வைத்துதான் தெம்மா.. தெம்மா.. தெம்மாடிகாற்றே பாடல் எழுதப்பட்டது. இந்தப் பாடல்தான் தற்போது ரீல்ஸில் வைரலாகி வருகிறது.

என்ன பாடல்

என்ன பாடல்

சமீபத்தில் கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் சிலர் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு ஹாஸ்டலில் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டு இருந்தனர். ஆபாசமான ஸ்டெப்ஸ் போட்டு இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டு இருந்தனர். அது கேரளாவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் ஹிட் அடித்தது.அப்போதே எண்ணங்கடி இது என்று கூறி பலர் அந்த வீடியோவை ஷேர் செய்து இருந்தனர். அதன்பின் தமிழ்நாட்டிலும் பல ஹாஸ்டல்களில் இதே வீடியோ டிரெண்டானது. சில பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு இந்த வீடியோவை வெளியிட்டு இருந்தனர். அப்போதே இது பெரிய சர்ச்சையானது.

தெம்மாடிகாற்றே

தெம்மாடிகாற்றே

தற்போது இதே ஆடியோவையோ வைத்து இளைஞர்களும் வீடியோவை போட தொடங்கி உள்ளனர். முக்கியமாக தமிழ்நாட்டு இளைஞர்கள் பலர் இதை வைத்து வீடியோ போடுகிறார்கள். ஹாஸ்டலில் எடுப்பது, வீட்டில் எடுப்பது கூட.. உங்கள் இடம்.. உங்கள் டேட்டா என்று சொல்லிவிடலாம். ஆனால் தூத்துக்குடியில் நேற்று ஒரு கும்பல் பொது இடத்தில் நின்று இப்படி வீடியோ எடுத்துள்ளனர். 2கே கிட்ஸ் கும்பல் ஒன்று தூத்துக்குடியில் பீச் அருகே நின்றும், பீச் செல்லும் வழியில் இருக்கும் ரவுண்டானாவில் நின்றும் இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.

ஏன் சர்ச்சை?

ஏன் சர்ச்சை?

இந்த பாடல் வரிகளில் தவறு எதுவும் இல்லை. ஆனால் இதற்காக அவர்கள் போடும் ஸ்டெப்தான் சர்ச்சையாகி உள்ளது. போது இடங்களில் அந்த ஸ்டெப் போடுவது அநாகரீகம் இருக்கின்றது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் சட்டப்படி இவர்கள் செய்வது nuisance என்ற அளவில் வர கூடியது. ஆனாலும் ரீலிஸ் வியூசுக்காக 2கே கிட்ஸ் இந்த வீடியோக்களை எடுத்து டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த புதிய ஆபாச டிரெண்ட் இணையத்தில் பலரின் முகங்களை சுளிக்க வைத்துள்ளது.

English summary
Why does Themmadikatre reels trend is not a good taste and should be stopped?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X