ஷ்ஷ்ஷூ.. ஓவர் சத்தம்.. பெட்ஷீட் எடுத்து கணவனின் கழுத்தை இறுக்கி கொன்ற பெண்.. அலறிய தூத்துக்குடி
போர்வையால் கணவனின் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார் மனைவி
தூத்துக்குடி: போர்வையால் கணவனின் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார் மனைவி.. இந்த சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.
2 நாளைக்கு முன்புதான் இதேபோன்ற ஒரு சம்பவம் தூத்துக்குடியில் நடந்தது.. இனிகோ என்பவரை அவரது மனைவி மரியவினோ சித்ரவதை செய்திருக்கிறார்..
கணவன் பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுக்க வேண்டும் என்று 13 வருடமாகவே கணவனை டார்ச்சர் செய்து வந்திருக்கிறார் மனைவி.

டார்ச்சர்
அதற்கு மறுத்த கணவன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றி கொலை செய்ய முயன்றுள்ளார்.. அதுமட்டுமல்ல, கணவனின் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவி அவரை கொல்லவும் முயற்சி செய்திருக்கிறார்.. இப்போது அந்த மனைவி கைதாகி ஜெயிலில் இருக்கிறார். மீண்டும் ஒரு சம்பவம் இதே தூத்துக்குடியில் நடந்து பதைபதைக்க வைத்து வருகிறது.

குடிபோதை
தூத்துக்குடி தாளமுத்துநகர் அட்டகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்.. இவர் ஒரு கூலி தொழிலாளி. மனைவி பெயர் சுப்புலட்சுமி.. ஒரு மகன், மகள் இருக்கிறார்கள்.. ஆறுமுகம் மதுப்பழக்கம் உடையவர்.. சம்பவத்தன்று இரவும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார்.. அப்போது தம்பதிக்குள் தகராறு நடந்துள்ளது.. பொறுத்து பொறுத்து பார்த்த சுப்புலட்சுமி, கணவரை சத்தம் போடாமல் இருக்க சொல்லி மிரட்டி உள்ளார்.

ஆறுமுகம்
ஆனாலும் ஆறுமுகம் தொடர்ந்து போதையில் உளறி கொண்டே இருந்திருக்கிறார்.. இதனால் ஆத்திரமடைந்த மனைவி, போர்வையை எடுத்து ஆறுமுகத்தின் கழுத்தை சுற்றி இறுக்கியதாக கூறப்படுகிறது... இதில் ஆறுமுகம் மயங்கிவிட்டார்.. பிறகு காலையில் ஆறுமுகத்தை தட்டி எழுப்பும் போதுதான் அவர் அசைவற்று கிடந்துள்ளார். இதையடுத்து, தாளமுத்து நகர் போலீசுக்கு சுப்புலட்சுமி தகவல் தந்தார்.. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆறுமுகத்தை மீட்டு தூத்துக்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...

கைது
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆறுமுகம் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.. இதைத்தொடர்ந்து அவரது உடல் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டது... விசாரணையும் ஆரம்பமானது. முதல் விசாரணையே சுப்புலட்சுமிதான்... சம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட எஸ்பி, சுப்புலட்சுமியிடம் கணவர் இறந்தது குறித்து விசாரணை நடத்தினார்... இந்த மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தாளமுத்து நகர் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications