Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட போகிறீர்களா என்ற கேள்விக்கு திமுக எம்பி கனிமொழி கொடுத்த பதில் என்ன தெரியுமா? தூத்துக்குடி விளாத்திக்குளத்தில் கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற வந்திருந்த போது அவரிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டது.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் நேர்காணல் எனத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

Kanimozhi Tiruchendur Election News

இந்த நிலையில், திமுகவின் முக்கியத் தூணாக விளங்கும் எம்பி கனிமொழி அவர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை அறிவாலயத்தில் பலமாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

திமுகவின் மெகா கூட்டணி மற்றும் முன்னேற்பாடுகள்

கடந்த தேர்தலை விட இந்த முறை சுமார் 28 கட்சிகளை உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்ட கூட்டணியை திமுக கட்டமைத்துள்ளது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கனிமொழிக்கு குவியும் விருப்ப மனுக்கள்

திமுகவின் துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, வரும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகக் களம் காண வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விருப்பமனுக்களை அள்ளிக் குவித்துள்ளனர். குறிப்பாக, அவர் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின் பிரதான விருப்பமாக உள்ளது.

மாநில அரசியலில் கனிமொழியின் முக்கியத்துவம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக கட்சியில் மிக முக்கியமான ஆளுமையாக கனிமொழி பார்க்கப்படுகிறார்.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பான டெல்லி பேச்சுவார்த்தையில் கனிமொழி நேரடியாக ஈடுபட்டது, அவர் தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்குத் திரும்பப் போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் இரண்டு முறை எம்பியாக வெற்றி பெற்றுள்ள கனிமொழி, மக்களோடு மக்களாக நின்று பணியாற்றுபவர் என்ற நற்பெயரைப் பெற்றுள்ளார்.

திருச்செந்தூர் ஏன்?

தற்போது தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு தொகுதியில் போட்டியிடுவது அவருக்குச் சாதகமாக இருக்கும் என ஆதரவாளர்கள் கருதுகின்றனர். அதன் அடிப்படையிலேயே திருச்செந்தூர் தொகுதிக்கான விருப்ப மனுக்கள் அதிக அளவில் தலைமைக்குச் சென்றுள்ளன. இது குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுப்பார் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை அடுத்த வேடநத்தம் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க காட்டு பகுதிக்கு சென்ற பிளஸ் 2 மாணவி சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி ஆறுதல் தெரிவித்துவிட்டு வெளியே வந்த போது அவரிடம் செய்தியாளர்கள், சட்டசபை தேர்தலில் போட்டியிட போகிறீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் "தொண்டை கட்டிக் கொண்டுள்ளது, பிறகு பேசுகிறேன்" என சிரித்தபடியே சொல்லிவிட்டு சென்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+