இனிக்க இனிக்க பேசி காதல் வலை! ’எல்லாம்’ முடிந்தபின் சாதியை சொல்லி ராகுல் எஸ்கேப்! தூத்துக்குடி ஷாக்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி : தூத்துக்குடியில் காதல் வலையில் வீழ்த்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நர்சிங் கல்லூரி மாணவி, சாதியை காரணம் காட்டி காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி லேபர் காலணியை சேர்ந்தவர் சதிஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூலி தொழிலாளியான இவர் பட்டியல் சாதியினை சார்ந்தவர். இவரது மகளான 20 வயது பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.

இவருக்கும் பக்கத்துவீட்டை சார்ந்த ராகுல் காந்தி என்ற ராபிக்கும் காதல் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமண ஆசை வார்த்தை கூறி பிரியாவை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கர்ப்பம்

கர்ப்பம்

மேலும் ப்ரியா இருமுறை கர்ப்பமாகி கருக்கலைப்பும் செய்துள்ளார். தற்போது பிரியா மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் ராபி பிரியா வெவ்வேறு ஜாதி என்பதால் மாணவியை ராபி திருமணம் செய்ய மறுத்துள்ளார் இதனால் மனமுடைந்த மாணவி பிரியா வீட்டில் வைத்து விஷமருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

போராட்டம்

போராட்டம்

மாணவியின் பெற்றோர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையினைமுற்றுகையிட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் பாதிப்பை ஏற்படுத்திய ராகுல் காந்தியை கைது செய்ய வேண்டும் எனவும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.

காதல் வலை

காதல் வலை

தூத்துக்குடியில் நர்சிங் பயிலும் மாணவி ஒருவர் காதல் வலையில் சிக்கி கர்ப்பமாகி திருமணம் செய்ய மறுத்ததால் விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், மாணவியின் பெற்றோர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையினை முற்றுகையிட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் பாதிப்பை ஏற்படுத்திய ராகுல் காந்தியை கைது செய்ய வேண்டும் எனவும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டம்

போராட்டம்

மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உடலை வாங்க மறுத்து வருகின்றனர். ராகுல் காந்தியை கைது செய்ய வேண்டும். இழப்பீடு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தொடர் போராட்டம் வலுத்துள்ளதால், உடற் ஆய்வு செய்யப்பட்ட உடலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற இல்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என உறவினர் எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+