வேலூர் அருகே 7ம் வகுப்பு மாணவியை சீரழித்த 5 பேர் கும்பல்... தந்தையை அவமானப்படுத்த வெறிச்செயல்
வேலூர்: ஒடுக்கத்தூர் அருகே 7ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தந்தைக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டி குடும்பத்திற்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 20ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதனால் 14வயது சிறுமியின் தந்தையை பழிவாங்குவதற்காக ஆண்டியின் மகன் குமார்(32) மாணவியை இரவு நேரத்தில் பலவந்தமாக கடத்தி சென்றாராம்.

தந்தை அதிர்ச்சி
இந்நிலையில் நள்ளிரவில் கண்விழித்து பார்த்த போது மகளை காணாததால் மாணவியின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் தேடி பார்த்த அவர் மகளை காணாமல் வேதனையில் இருந்துள்ளார்.

படுகாயம்
இந்நிலையில் ஆண்டியின் உறவினர் ரவி வீட்டில் அவரது மகள் இருப்பதை அறிந்த அவர், அங்கு துரைச்சாமி மற்றும் சுரேஷ் உள்ளிட்ட உறவினர்களுடன் சென்று மீட்க முயன்றுள்ளார். அப்போது நடந்த சண்டையில் ஆண்டி மகன் குமார், சிறுமியின் உறவினர் ஒருவரை கத்தியால் குத்திவிட்டாராம். இதில் படுகாயம் அடைந்த அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமி மீட்பு
இதன்பின்னர் மாணவியை மீட்டு அவர்கள் அழைத்து வந்தனர். அப்போது 14 வயது மாணவி தன்னை, ஆண்டி, சேட்டு, அண்ணாமலை, ரவி, வேலு ஆகிய ஐந்து பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தாயாரிடம் கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை
இதையடுத்து வேப்பங்குப்பம் போலீசார் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானால் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றனர். தற்போது குற்றம்சாட்டப்படும் 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications