வேலூரில் மகளிர் உரிமை தொகை.. 2 லட்சம் பேருக்கு நல்ல விஷயம்.. அதிகாரிகள் தந்த அப்டேட்
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 2 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், விடியல் பயணம் திட்டம், மக்களை தேடி மருத்துவம் மற்றும் புதுமை பெண் உள்பட பல்வேறு திட்டங்களில் பயன்பெற்ற மக்களின் விவரங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட அதிகாரிகள் இதுபற்றி கூறும் போது, "தமிழ்நாட்டினை அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக திகழ்ந்திடும் வகையிலும், அனைத்து தரப்பு மக்களின் நலனிலும் அதீத அக்கறை கொண்டு குறிப்பாக ஏழை, எளிய மக்களும் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற பல திட்டங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 975 பேர் பயன்பெற்றுள்ளனர். விடியல் பயணம் திட்டத்தின் கீழ் 9 கோடியே 10 லட்சத்து 50 ஆயிரத்து 883 முறை பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் 658 பள்ளிகளில் படிக்கும் 36 ஆயிரத்து 996 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 53 ஆயிரத்து 963 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். புதுமை பெண் திட்டத்தின் கீழ் 8,478 மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெற்று வருகிறார்கள்.
மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 18 ஆயிரத்து 608 பேர் பயன் பெற்றுள்ளார்கள். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 8,497 பேருக்கு ரூ.8 கோடியே 60 லட்சத்து 25 ஆயிரத்து 54 மதிப்பில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 25 பேருக்கு பல கோடி மானியத்துடன் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது" இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் எப்போது?: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள இரண்டே கால் கோடி ரேஷன் கார்டுகளில் பாதிப்பேருக்கு கிடைத்து வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்த 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை கடந்த ஜனவரியில் 1 கோடியே 7 லட்சத்து 50 ஆயிரம் ஆக அதிகரித்திருக்கிறது.
இந்த நிதியாண்டில் அரசு ஒதுக்கியுள்ள இந்த 13720 கோடி ரூபாய் தொகையினை வைத்து ஒரு கோடியே 1 4லட்சத்து 33 ஆயித்து 33 பேருக்கு மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்க முடியும். எனவே தற்போது ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் எண்ணிக்கையான 1 கோடியே எட்டு லட்சம் என்பது ஒரு கோடியே 15லட்சம் என்கிற அளவில் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.
அதாவது இந்த ஆண்டு புதிதாக சுமார் 7 லட்சம் மகளிருக்கு மேல் புதிதாக கலைஞர் உரிமை தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 7 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்து பயன்பெற முடியும் என்பதால், புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்து ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அறிவிப்பு வெளியாகக்கூடும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 4வரை அமலில் இருப்பதால் அரசு இதுபற்றி அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் இருக்கிறது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 வருடங்களே உள்ள நிலையில், அதிகப்படியான பெண்களுக்கு புதிதாக மகளிர் உரிமை தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது ஒருபுறம் எனில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஆர்வமுடன் இருக்கிறார்கள். அவர்களில் தகுதியான பலருக்கும் இந்த முறை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications