30 பேர்.. டெஸ்ட்டுக்கு போன ரத்த மாதிரி.. 3வது அலையின் தாக்கம் எப்படி இருக்கும்.. வேலூரில் ஆய்வு!
வேலூரில் 30 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது
வேலூர்: எத்தனை பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று கண்டறியும் சோதனை வேலூர் மாவட்டத்தில் ஆரம்பமாகி உள்ளது.. இந்த டெஸ்ட்களின் அடிப்படையில் மக்களின் நோய் எதிர்ப்பு திறன் அறியப்பட்டு 3-வது அலையின் தாக்கம் எப்படி இருக்கும் என கணக்கீடு செய்யப்பட உள்ளது.. இதற்காக 30 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 46,826 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45,317 பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகியும் வீட்டுக்கு திரும்பிவிட்டனர்..
இப்போதைக்கு 474 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1035 பேர் இந்த தொற்றினால் இறந்துள்ளனர்.. இதில் 2-வது அலையில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனராம்...!

ஆய்வு
வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை, கொரோனா 2-வது அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பில் ஒரு நாள் உச்ச கட்டமாக 700 பேர் வரை பாதிக்கப்பட்டனர்.. ஆனால் தற்போது கொரோனா 2-வது அலை பரவல் குறைந்து வருகிறது என்றாலும், 3-வது அலையின் தாக்கம் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

கொரோனா
2-வது அலையால் பொதுமக்களின் உடலில் ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்புத் திறனை அறிய "சீரோசர்விலன்ஸ்" என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. இதற்கான பட்டியலை ஐசிஎம்ஆர் மாவட்ட சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைத்தது.

டெஸ்ட்கள்
இதையடுத்து, வேலூர் மாவட்டத்தில் 30 இடங்களில் ரத்த மாதிரிகள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதியில் முதல், 2-வது மண்டலங்களில் தலா 3 இடங்களிலும், 3-வது மண்டலத்தில் ஒரு இடத்திலும் பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.

புது டீம்
எனவே, வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்தை சேர்ந்த ஒரு நபரிடம் இருந்து ரத்த மாதிரி சேகரிக்கும் பணியில் புது டீம் இறங்கி உள்ளது.. இவர்கள், 30 இடங்களிலும் 30 பேரிடம் ரத்த மாதிரிகளை சேகரித்து, சேலத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைப்பார்கள்.. அங்கு ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு பொதுமக்களின் நோய் எதிர்ப்புத் திறன் கண்டறியப்படும்.

3வது அலை
இதில் முதல்கட்ட டெஸ்ட்டில், வேலூர் மாவட்டத்தில் நோய் எதிர்ப்புத் திறன் 33 சதவீதம் பேருக்கும், 2-வது கட்ட பரிசோதனையில் 32 சதவீதம் பேருக்கும் உருவாகியிருந்தது. இப்போது, 3-வது கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது... தொடர்ந்து 10 நாள்கள் இந்த ரத்த மாதிரி சேகரிப்பு பணி நடைபெறும் என்றும், இந்த டெஸ்ட்களின் அடிப்படையில் மக்களின் நோய் எதிர்ப்பு திறன் அறியப்பட்டு 3-வது அலையின் தாக்கம் எப்படி இருக்கும் என கணக்கீடு செய்யப்படும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications