வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தோற்றாலும் செல்வாக்கை போகலை.. 5 மாநில தேர்தல் முடிவு பற்றி பொன்.ராதாகிருஷ்ணன்

Google Oneindia Tamil News

வேலூர் : 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சின்ன சறுக்கல் தான் என்றும், மாநில தேர்தலை வைத்துக்கொண்டு நாடாளுமன்ற தேர்தலை கணக்கிட கூடாது என்றும் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பாஜக எஸ்சி அணியின் 5-வது மாநில செயற்குழு கூட்டம் வேலூரில் நடைபெற்றது. அதில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

5 states election result is a big blow to bjp – minister of state pon.radha krishnan accepts the verdict

பின்னர்செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :

கருணாநிதி தமது செயல்பாடுகள் மூலம் அனைத்து கட்சியினரின் மரியாதையை பெற்றவர். ஆனால் இன்றைக்கு அந்த கட்சி மரியாதையை இழந்திருக்கிறது. சூரியன் தேவை.. ஆனால் பாலைவனம் ஆக்கக்கூடிய சூரியன் தமிழகத்திற்கு தேவையில்லை.

எங்களுக்கு இந்த திட்டம் வேண்டும் என்று காங்கிரஸோ, தி.மு.கவோ கேட்டுள்ளதா? தமிழ்நாடு வளர வேண்டும் என்பது அவர்களது நோக்கம் இல்லை. 5 மாநில தேர்தல் முடிவுகள் சின்ன சறுக்கல் தான். ஆனால் ஓட்டு சதவிகிதம் உயர்ந்துள்ளது. மாநில தேர்தலை வைத்துக்கொண்டு நாடாளுமன்ற தேர்தலை கணக்கிட கூடாது.

வரும் லோக்சபா தேர்தலில் தற்போது இருக்கும் இடங்களைவிட அதிக நாடாளு மன்ற உறுப்பினர்களை பெற்று பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரத்தான் போகிறார். உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக அடுத்த 5 ஆண்டில் நிச்சயம் இந்தியா மாறும் இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

English summary
5 states election result is a big blow to bjp, central minister Pon.Radha Krishnan accepts the verdict and he confidence that the party will win 2019 lok sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X