வேலூரில் தேர்தல் பணிகளை ஆரம்பித்த ஏ.சி.சண்முகம்! புதிய நீதிக்கட்சி நிர்வாகிகளை அழைத்து கவனிப்பு!
வேலூர்: அதிமுக -பாஜக கூட்டணி சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில் களமிறங்கும் திட்டத்தில் உள்ள புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இப்போதே தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.
சோர்ந்துகிடந்த தனது கட்சி நிர்வாகிகளை அழைத்து பலமாக கவனித்ததுடன் புதிய பொறுப்புகளையும் அவர்களுக்கு வழங்கியுள்ளார். அதிமுக, பாஜக நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போதும் வேலூர் தொகுதியில் பேட்டியிட்டவர் ஏ.சி.சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது.

துரைமுருகன் மகன் கதிர் ஆனந்திடம் சொற்ப வாக்குகளில் கடந்த முறை வெற்றியை பறிகொடுத்த ஏ.சி.சண்முகம், இந்த முறை வென்றே தீருவது என சபதம் எடுத்துள்ளார். இதனிடையே அதிமுக -பாஜக கூட்டணி சார்பில் களமிறங்கும் ஐடியாவில் உள்ள இவர், தாமரை சின்னத்தில் போட்டியிடுவாரா அல்லது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவாரா என்ற விவரம் தெரியவரவில்லை.
வேலூர் மக்களவைத் தொகுதியில் இப்போதே ஏ.சி.சண்முகம் சத்தமின்றி பரப்புரையை தொடங்கிவிட்டதால், அவரை சமாளிக்க திமுக தரப்பிலும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. மீண்டும் தனது மகன் கதிர் ஆனந்தை வேலூர் தொகுதியில் போட்டியிட வைக்க விரும்புகிறார் துரைமுருகன். இதனால் தான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்னையிலிருந்து வேலூருக்கு புறப்பட்டுச் சென்று கிராமம் கிராமமாக டூர் செல்கிறார்.
ஜெகத்ரட்சகன், பாரிவேந்தர் என ஏற்கனவே கல்வித் தந்தைகளாக அறியப்படுபவர்கள் எம்.பி.யாகி டெல்லிக்கு சென்றுள்ள நிலையில் அந்த வரிசையில் இடம்பிடிக்க விரும்புகிறார் ஏ.சி.சண்முகம்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications