அம்மானா சும்மா இல்ல! விபத்தில் சிக்கிய மகனை மார்போடு அணைத்து உயிர் விட்ட தாய்! ஒரு கீரல் கூட இல்லையே!
திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் சிக்கிய போதும் தனது 3 மாத குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு ஒரு சிறு கீரல் கூட விழாமல் பார்த்துக் கொண்ட தாய் உயிரிழந்ததால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்த உலகத்தில் தாயை விட சிறந்த ஒன்று இருந்து விட முடியாது. தன் உயிரைக் கொடுத்து ஒரு குழந்தையை பெற்றெடுப்பது முதல் அவர்களை வளர்த்தெடுப்பது வரை ஒரு தாயின் தியாகத்தை அவ்வளவு எளிதில் எடை போட்டு விட முடியாது.
வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிட்டால் கூட ஒரு தாய்க்கு தனது குழந்தைகள் எப்போதுமே குழந்தைகள் தான். அவர்களுக்கு ஒரு சிறு பிரச்சனை என்றாலும் அந்த தாய் மனதால் தாங்கிக் கொள்ள முடியாது.

விபத்து
அப்படி ஒரு சம்பவம் தான் திருப்பத்தூர் மாவட்டம் அருகே நிகழ்ந்திருக்கிறது. திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தாய் உயிரிழந்த நிலையில் தனது மூன்று மாத குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு ஒரு சிறு கீரல் கூட விழாமல் காப்பாற்றி இருக்கிறார். ஜோலார்பேட்டை அருகே உள்ள வேலூரான் வட்டம் பகுதியைச் சேர்ந்த ஆஞ்சநேயன் என்பவரது மகள் சந்திரலேகாவுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

அடையாளம் தெரியாத வாகனம்
இந்த நிலையில் இன்று ஆஞ்சநேயன் தனது மகள் சந்திரலேகாவை பேரக்குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக நாட்றம்பள்ளி பகுதியில் இருந்து வெலக்கால்நத்தம் அருகே உள்ள மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றிருக்கிறார். வேலூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுண்ணாம்பு குட்டை அருகே வந்தபோது எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதுவிட்டு நிற்காமல் சென்றது.

தாய் உயிரிழப்பு
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஆஞ்சநேயர் சந்திரலேகா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ஆனாலும் தனது கைக்குழந்தையை கீழே விட்டு விடாமல் மார்போடு அணைத்துக்கொண்ட சந்திரலேகா அந்த குழந்தைக்கு எந்தவித காயமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். இந்த விபத்தை கண்டு அருகில் இருந்தோர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

தாயின் அன்பு
மேல் சிகிச்சைக்காக சந்திரலேகா தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி ஒரு நிலையில் விபத்தில் தன் உயிர் பிரியும் என தெரிந்தும் தன் குழந்தையை காப்பாற்றி விட வேண்டும் என்ற தாயுள்ளத்தின் தவிப்பும் அதனை நிறைவேற்றிக் காட்டிய தியாகமும் தற்போது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications