வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அய்யா சாமிகளா.. இந்த தேர்தலையாவது ஒழுங்கா நடத்த விடுங்கப்பா.. திமுகவுக்கு ஏசிஎஸ் கோரிக்கை!

திமுகவினருக்கு அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election | தேர்தலை ஒழுங்கா நடத்த விடுங்க: திமுகவுக்கு ஏசிஎஸ் கோரிக்கை!- வீடியோ

    வேலூர்: "இந்த தேர்தலை ஆவது ஒழுங்காக நடத்த விடுங்கள்" என்று ஏசி சண்முகம் திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அதிமுக கூட்டணி சார்பாக ஏசி சண்முகம் இரட்டை இலையில் வேலூரில் களம் இறங்குகிறார். இதன் காரணமாக கேவி குப்பம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பிரச்சாரத்தையும் தீவிரமாக ஆரம்பித்து விட்டார்.

    மிக்சர் கடை உள்பட எல்லா கடைகளுக்கும் சென்று அங்கிருந்தவர்களிடம் ஏசி சண்முகம் வாக்கு கேட்டார். வழக்கமான அரசியல்வாதிகளை போலவே ஏசி சண்முகமும் டீக்கடை ஒன்றிற்கு சென்றார். ஒரு ஸ்டூலை இழுத்து போட்டு உட்கார்ந்து கொண்டார். அவருடன் ஆதரவாளர்களும் உட்கார்ந்து சுடச்சுட டீ சாப்பிட்டனர். அப்படியே டீக்கடையில் ஓட்டையும் கேட்டுவிட்டு நகர்ந்தனர்.

    வேலூரில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்.. அரசுக்கு கருணாஸ் முக்கிய கோரிக்கைவேலூரில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்.. அரசுக்கு கருணாஸ் முக்கிய கோரிக்கை

    பெண்கள் புகார்

    பெண்கள் புகார்

    பிறகு பழைய தொண்டாந்துளசி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட வந்தார். அப்போது ஏதோ பேச முயன்றார் ஏசி சண்முகம். அதற்குள் அந்த பகுதி பெண்கள் ஒன்றுகூடி, லிஸ்ட் போட்டு புகார் சொல்லி, இதுவரை எங்களுக்கு பாத்ரூம் வசதிகூட கட்டித்தரவில்லை என்று முறையிட்டனர்.

    உறுதி

    உறுதி

    அதற்கு ஏசிஎஸ், "நாங்கள் ஜெயித்ததும் உங்களுக்கு முறையாக என்னென்ன அடிப்படை வசதிகள் தேவையோ அவ்வளவையும் வேகமாக செயல்படுத்தி தருவோம்" என்றார். அதன்பிறகு அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

    முதல் உரிமை

    முதல் உரிமை

    இறுதியாக செய்தியாளர்களை சந்தித்தபோது ஏசிஎஸ் சொன்னதாவது: போன முறை சில கிராமங்களில் டைம் கிடைக்காமல் பிரச்சாரம் செய்ய முடியாமல் போய்விட்டது. அதனால் முதல் வேலையாக இப்போது அந்த இடங்களுக்குதான் முதல் உரிமை கொடுத்து பிரச்சாரம் செய்து வருகிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் சென்று மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை நேரில் கேட்டு வருகிறோம்.

    அண்ணா வழி

    அண்ணா வழி

    இப்போது திமுக பிரமுகர் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சமயத்தில் திமுக கட்சினருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்த தேர்தலையாவது ஒழுங்கா நடத்த விடுங்கள். போன முறை நீங்கள் செய்த தவறால் பிரதமரை தேர்ந்து எடுக்கும் உரிமையை நாம் இழந்து விட்டோம். தேர்தலை ஜனநாயக முறையில் அண்ணா வழியில் சந்தியுங்கள். இதுவே எனது வேண்டுகோள்" என்றார்.

    English summary
    AIADMK alliance Candiate AC Shanmugam campaigned in Vellore Constitution and he has requested to DMK about the election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X