வேலூருக்கு நற்செய்தி.. பிஎப் பணம் இருக்கா? வருங்கால வைப்பு நிதியில் குட்நியூஸ்.. இதை மிஸ் பண்ணாதீங்க
வேலூர்: வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. இ.பி.எப்.ஓ. குறித்த சந்தேகங்கள் இருந்தால், அதனை களைவதற்கான வழிவகையும் செய்யப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஒவ்வொரு மாதமும் 10-ந்தேதி "வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்" என்ற பெயரில் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்தி வந்தது. இதில், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரின் குறைகள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வந்தன.

ஆனால், இப்போது, ஒவ்வொரு மாதமும் 27-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் "வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0" என்ற பெயரில் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்த மத்திய தொழிலாளர் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
வருங்கால வைப்புநிதி: இதில், வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரின் குறைதீர்க்கும் முகாம் மற்றும் சேவை வழங்கும் தளமாகவும், தகவல் பரிமாற்ற அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த மாதமும் குறைதீர் கூட்டம் நடக்கிறது.. இன்று 27ம் தேதி என்பதால், மாவட்டங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5.45 மணி வரை இந்த முகாம் நடக்க போகிறது.
வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவுபெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப்.டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் இந்த முகாம் இன்று நடக்கிறது.
கலந்துரையாடல்: புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள், தொழிலாளர்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விளக்குதல், ஒப்பந்ததாரர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறைகளை விளக்குதல் போன்றவை இந்த முகாமில் நடைபெறும்.. இதைத்தவிர, தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள், புதிய முயற்சிகள், சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு, விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
மேலும், உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முதலாளிகளிடமிருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்தல், ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பித்தல், இ-நாமினேஷன் தாக்கல் செய்தல் போன்றவை நடைபெறும். அத்துடன், இந்த மாதத்துக்கான மைய கருப்பொருளாக உறுப்பினர் ஓய்வூதியம் மற்றும் இறப்பு ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அனாதை ஓய்வூதியம், ஊனமுற்றோர் ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான சேவைகள் இம்முகாம்களில் நடைபெற உள்ளது.
காட்பாடி: அந்தவகையில், வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட 10 இடங்களில் முகாம்கள் இன்று நடக்கிறது. குறிப்பாக, வேலூர் அலுவலகம் சார்பில் காட்பாடி க்ளூனி கான்வென்ட் பள்ளி வளாகம், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காந்தி நகரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகம், ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் சிஎஸ்ஐ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கவளாகத்திலும் முகாம்கள் இன்று நடக்கிறது.
இதேபோல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, காரைக்கால் என வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட 10 இடங்களில் முகாம் நடக்கிறது.
ஆன்லைன்: எனவே, சம்பந்தப்பட்டவர்கள் இந்த முகாம்களில் பங்கேற்று, இ.பி.எப்.ஓ. குறித்த சந்தேகம் மற்றும் குறைகளை தீர்க்கலாம்.. பிஎப் அதிகாரிகளை நேரடியாகவே சந்தித்து உங்களை குறைகளை முறையிடவும் முடியும். ஆனால், இதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications