ராமர் கோயில்.. முதல் அழைப்பே முஸ்லிம்களுக்குதான்! துரைமுருகன் மகனை சைலண்டாக டார்கெட் செய்த அண்ணாமலை
வேலூர்: அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பிரான பிரதிஷ்டை முதல் அழைப்பே முஸ்லிம்களுக்குதான் வழங்கப்பட்டது என்று தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
வேலூரில் யாத்திரையின் போது பேசிய அவர், "பாரதப் பிரதமரின் ஒன்பதாண்டு கால நல்லாட்சி, இலக்கு நிர்ணயித்துச் செயல்படுகிறது. சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் கடந்தும் மின்சார வசதி இல்லாத கிராமங்கள் நம் நாட்டில் இருந்தன. நமது பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன், 1000 நாட்களில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவோம் என்று அறிவித்து, சுமார் 800 நாட்களிலேயே இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கினார். ஊழலற்ற ஆட்சியினால், உலக அரங்கில் நமது நாட்டின் வளர்ச்சி பல மடங்காகியிருக்கிறது. தமிழ் வளர்ச்சிக்காகவும் தமிழர்கள் நலனுக்காகவும் நமது பிரதமர் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் ஏராளம்.

அயோத்தி ராமர் கோவில் கட்ட, அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து, அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி, சட்டப்படியான தீர்ப்பின் மூலம் கட்டியிருக்கிறோம். பாராளுமன்றத்தில், பெரும்பான்மை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவில்லை. ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை முதல் அழைப்பிதழ் இஸ்லாமிய சகோதரருக்குத் தான் வழங்கப்பட்டது. நமது பிரதமர் அவர்கள், 11 நாட்கள் கடும் விரதம் இருந்து, தமிழகத்தில் ராமருடைய பாதம் பட்ட இடங்களில் எல்லாம் வழிபட்டு, அயோத்தியில் பிராணப் பிரதிஷ்டை செய்தார்.
தமிழகத்தில், இத்தனை ஆண்டு காலமாக, மத அரசியலும், ஜாதி அரசியலும் செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சி தேங்கி நிற்கிறது. இன்றைய தினம், உலகின் நம்பர் ஒன் ப்ராண்ட் வால்யூ இருக்கும் ஒரே தலைவர் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். அவர் லட்சத் தீவில் போய் நின்றாலே, லட்சத் தீவின் சுற்றுலாத் துறை 3,000 மடங்கு அதிகரிக்கும். அதே போல, இம்முறை வேலூர் பாராளுமன்றத் தொகுதியை பாஜக வெல்லும்போது, நமது பிரதமர் மோடி அவர்களை வேலூருக்கு அழைத்து வந்து, வேலூர் கோட்டையை உலக அரங்கிற்குக் கொண்டு செல்கிறோம் என்று உறுதி அளிக்கிறோம்.
மத்தியில், ஊழலற்ற நல்லாட்சி தொடர்ந்திட, குடும்ப அரசியல் நடத்தும் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு, வேலூரின் வளர்ச்சிக்கு, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க இம்முறை தமிழகம் முழுக்க பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார். வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக பதவி வகித்து வருபவர் திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தலை இவரது தொகையை பாஜகவை வெல்லும் என்று குறிப்பிட்டு இருக்கிறார் அண்ணாமலை.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications