பரிசு பொருட்கள், பணம், இலவசத்துக்கு செக்..கவுண்டவுன் ஸ்டார்ட்.. தமிழகம் வருகிறது தேர்தல் ஆணையர் குழு
வேலூர்: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநில அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதாக எதிர்பார்க்கப்படும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள இந்திய தேர்தல் ஆணையம், அடுத்த மாதம் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான உயர்நிலை குழுவை தமிழ்நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது... இந்த வருகையானது, தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது...

இதற்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் அதீத வேகத்துடன் முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக, தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை நேரடியாக ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான உயர்மட்டக் குழு, பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல்
வெளியாகி உள்ளது..
சட்டசபை தேர்தல்
பொதுவாக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையிலான குழு 2 நாட்கள் தங்கி இருந்து தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வது வழக்கமாகும். அந்தவகையில்தான் இந்த முறையும் தேர்தல் குழு தமிழகம் வருகிறது..
தற்போது தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள், புதிய வாக்காளர்கள் சேர்ப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன... பிப்ரவரி 17ம் தேதியன்று தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.. இந்த சூழலில்தான் சென்னை வரும் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு, இரண்டு நாட்கள் தங்கியிருந்து விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளது.
தேர்தல் அதிகாரிகள்
இந்த ஆய்வின் போது, மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு போன்ற மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்பட உள்ளன.
முக்கியமாக தேர்தல் காலத்தில் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்குவது மற்றும் நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் மிகத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க உள்ளது.
அதுமட்டுமல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் இந்த உயர்மட்டக் குழு நேரில் சந்தித்து ஆலோசிக்க உள்ளது.... அதேபோல தேர்தல் நடத்தை விதிமுறைகள், பிரச்சாரக் கட்டுப்பாடுகள் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அரசியல் விளம்பரங்கள் குறித்த புகார்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது..
பரிசு பொருட்கள், இலவசம், பணம்
தேர்தல் ஆணையத்தின் ஆய்வுக் கூட்டங்களுக்கு பிறகு, மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படும்..
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியாது என்பதை தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ஒரு வெளிப்படையான தேர்தலை உறுதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
தேர்தல் ஆணையர் குழுவின் வருகையும், அதனை தொடர்ந்து வெளியாகவுள்ள தேர்தல் அறிவிப்பும் தமிழகத்தின் அரசியல் தட்பவெப்ப நிலையை மேலும் சூடாக்கியுள்ளது. இதையடுத்து, இலவச பொருட்கள், பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் விநியோகம் போன்றவற்றுக்கு செக் வைக்கப்பட்டுவிடும்..
பரபரக்கும் தேர்தல் களம்
தேர்தல் ஆணையம் குழு தமிழகம் வரப்போகிறது என்ற தகவல் வெளியானதுமே, தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்பாகிவிட்டன.. தங்களது தேர்தல் வியூகங்களை வகுப்பதில் மிக தீவிரமாக இறங்கியுள்ளன.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனைகள் சீக்ரெட்டாகவும், ஓபனாகவும் மிக வேகமாக நடந்து வருகின்றன..
எப்படியும் இந்த முறை 4 முனைப்போட்டி என கணிக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு வாக்கும் வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக மாறியுள்ளது.... இந்த நேரத்தில் தேர்தல் ஆணையர் குழுவின் வருகையானது, தமிழக அரசியலை மேலும் சூடுபடுத்தி, தேர்தல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications