இளம்பெண் "உள்ளாடையை" திருடிய இளைஞர்.. ஆரம்பித்த வினை.. கடைசியில் ஒரு கொலை.. திகில் திருப்பத்தூர்
பெண்ணின் உள்ளாடைகளை திருடிய இளைஞர், காத்திருந்து அந்த பெண்ணை கொன்றார்
திருப்பத்தூர்: பிரியா குளித்து கொண்டிருந்தபோது, அவரது உள்ளாடைகளை திருடியுள்ளார் ஒரு இளைஞர்.. இதையடுத்து கையும், களவுமாக சிக்கிய நிலையில்தான், இப்படி ஒரு கொடூரம் நடந்துள்ளது.
திருப்பத்தூர் கந்திலி அருகே உள்ளது செல்லரபட்டி என்ற கிராமம்.. இங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் பெண்ணின் சடலம் கிடந்தது..
அந்த பெண்ணை யாரோ கொடூரமாக கொலை செய்திருந்தார்கள்.. தலை துண்டிக்கப்பட்டிருந்தது.. வெறும் உடம்பு பகுதி மட்டும் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தது.

போஸ்ட் மார்ட்டம்
இதனால், போலீசாருக்கு தகவல் சொல்லப்படவும் அவர்கள் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர்.. சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கும் அனுப்பினர்.. ஆனால், இது தொடர்பான விசாரணையில் துப்பு எதுவும் கிடைக்காததால், தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.. அப்போதுதான், இறந்தவர் 22 வயதுடைய சந்தோஷ் பிரியா என்ற பெண் என்பதும், பட்டப்படிப்பு முடித்துள்ள பிரியா, தனியார் கல்வி நிறுவனத்தில் குரூப் தேர்வுக்கு படித்து வந்ததும் தெரியவந்தது.

சந்தோஷ் பிரியா
அதுமட்டுமல்ல, இதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரை பிரியா சில வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்ததால், அவரது செல்போன் நம்பரையும் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.. ஆனால், ஊருக்குள்ளே மகேந்திரனை காணவில்லை.. இதனால் போலீசார் அவரை தேடுவதை அறிந்ததுமே, மகேந்திரன் நேரடியாக வந்து சரணடைந்தார்.. அப்போது மகேந்திரன் சொன்ன தகவல்களை கேட்டு போலீசார் அதிர்ந்தனர்.. மகேந்திரன் வாக்குமூலத்தில் சொன்னதாவது:

உள்ளாடைகள்
"ஆன்லைனில் வரும் பொருட்களை வீடுகளுக்கு நேரில் சென்று டெலிவரி செய்யும் வேலை செய்துவந்தேன்... 5 வருடங்களுக்கு முன்பு சந்தோஷ் பிரியாவை காதலித்தேன்... ஒருநாள் பிரியா அவரது வீட்டில் குளித்துக்கொண்டிருந்தார்... அப்போது அவரது உள்ளாடைகளை எடுத்து செல்ல முயன்றேன்.. அதை அவரது தாத்தா மற்றும் உறவினர்கள் பார்த்துவிட்டு, என்னை கடுமையாக திட்டி ஊரை விட்டு துரத்திவிட்டனர்.. நான் பெங்களூருவுக்கு சென்று அங்கு வேலை பார்த்தேன்.. கொஞ்ச நாள் கழித்து, இங்கு வந்து துணிக்கடையில் வேலை பார்த்து வந்தேன்.

மூக்கை மூடி கொலை
ஆனாலும், பிரியாவின் உள்ளாடையை எடுத்ததால், என்னை ஊரைவிட்டே துரத்திய ஆத்திரம் எனக்கு அடங்கவில்லை. சம்பவத்தன்று, பிரியாவை நேரில் சந்திக்க சென்றேன்.. செல்லரபட்டி அருகே பிரியா நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவளை பைக்கில் சென்று வழிமறித்தேன்.. என் பைக்கில் உட்காருமாறு சொன்னேன்.. அவள் மறுத்தாள்.. நான் கட்டாயப்படுத்தவும், ஆத்திரமடைந்து என்னை கன்னத்தில் அறைந்துவிட்டாள்.. இதனால் எனக்கு கோபம் அதிகமாகி, அவளது வாய், மற்றும் மூக்கை மூடிவிட்டேன்.. இதில் மயக்கம் அடைந்தாள்...

உள்ளாடை
அங்கேயே அவளை பலாத்காரம் செய்துவிட்டேன்.. இறுதியில் கழுத்தை கையால் இறுக்கியும், காலால் மிதித்தும் கொன்றேன்.. தலையை தனியாக துண்டித்து எடுத்தன்.. சடலத்தை பக்கத்தில் இருந்த விவசாய கிணற்றில் வீசிவிட்டேன்.. ஆனால், கொலை செய்து ஒரு மாதம் ஆகவிட்டதால், என்னை யாரும் பிடிக்க மாட்டார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்.. விசாரணை தீவிரபடுத்தப்பட்டதால்தான், நானே இப்போது சரணடைந்து விட்டேன்" என்றார்.. உள்ளாடைகளை திருடி பல வருடங்கள் ஆன நிலையில், காத்திருந்து இளம்பெண்ணை இளைஞர் கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications