வேலூரில் போலி சான்றிதழ் கொடுத்து வென்ற பஞ்சாயத்து தலைவி.. மொத்தமாக போச்சு.. வசமாக சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் தோளப்பள்ளி ஊராட்சி ஆதிதிராவிடர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுளளது. இந்த ஊராட்சியில் தலைவராக வெற்றி பெற்ற கல்பனா, போலி சாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடத்திய விசாரணையில், போலி சான்றிதழ் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து கல்பனாவை தகுதி நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் கணிசமான ஊராட்சி மன்ற இடங்கள், நகராட்சி தலைவர் பதவிகள், மாநகராட்சி மேயர் பதவிகள் பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு பிற சாதியினர் வர முடியாது. பட்டியல் இனத்தில் பிறந்தவர்களே வர முடியும். பட்டியல் இனத்தவர்கள் என்று சாதி சான்றிதழ் அளித்து பதவியில் வெற்றி பெற்றாலும், பின்னாளில் அவர்கள் போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தார்கள் என்பது தெரியவந்தால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Vellore election

அத்துடன் அவர்கள் பதவியும் உடனடியாக பறிக்கப்படும். மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தாலே உள்ளாட்சி பதவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் தான் வேலூர் மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தோளப்பள்ளி ஊராட்சி ஆதிதிராவிடர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

தோளப்பள்ளி ஊராட்சியில் தலைவராக வெற்றி பெற்ற கல்பனா வேட்புமனு தாக்கலின்போது ஆதிதிராவிடர் என போலி சாதி சான்றிதழை கொடுத்து வெற்றி பெற்றதாக புகார் எழுந்தது. அவரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்கியராஜ் என்பவர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தார்..

இது தொடர்பான வேலூர் மாவட்ட நிர்வாகம் விசாரணையில் இறங்கியது. மாவட்ட ஆட்சியர் நடத்திய விசாரணையில் கல்பனா சுரேஷ் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என்றும், போலியாக சாதி சான்றிதழை கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர் மீது வேப்பங்குப்பம் காவல் நிலையத்திலும் மாவட்ட நிர்வாகம் சார்பாக புகார் அளிக்கப்பட்டது. கல்பானாவின் ஆதிதிராவிடர் சாதி சான்று ரத்து செய்யப்பட்டு, அவரின் காசோலை அதிகாரமும் கடந்த ஆண்டு கலெக்டரால் பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் நீண்ட விசாரணைக்கு பின்பு 2 ஆண்டுகள் கழித்து தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து கல்பனாவை நேற்று தகுதி நீக்கம் செய்து வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+