'கல்லாப்பெட்டி கூட்டணி' என்ற வேலூரில் விமர்சித்த விஜய்.. பதிலுக்கு திமுக எழுப்பிய ஒரே கேள்வி
திருப்பத்தூர்: அண்ணா அறிவாலயம் பக்கத்தில் யார் நிழலுக்கு ஒதுங்கினாலும் கூட்டணியில் சேர்த்துக்கிறது: கொள்ளையடிச்சு வைத்திருக்கிற பணத்தில் பங்கு கொடுக்கிறது. அதுக்கு பேரு கல்லாப்பெட்டி கூட்டணி. இதனை ரொம்ப கஷ்டப்பட்டு சேர்த்திருக்கிறார்கள்.. பழைய கூட்டணி கணக்கெல்லாம் வெச்சி ஜெயிக்க முடியாது என விஜய் பேசியிருந்தார். இதற்கு பதில் அளித்த திமுக கழக அமைப்பு செயாலளர் ஆர்எஸ் பாரதி, முதலில் விஜய் கொள்ளையடித்த பணத்தை வெளியே எடுத்து வர சொல்லுங்கள், விஜயின் நாடகம் இன்னும் கொஞ்சம் நாளில் வெளியே தெரியும், எங்கள் தகுதிக்கு அவருக்கு பதில் அளிக்க அவசியம் இல்லை என்றார்.
திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் இன்று, திமுக சார்பில் ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டம்!தமிழ்நாடு தலைகுனியது! என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் திமுக கழக அமைப்பு செயலாளர், ஆர்.எஸ்.பாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சிறப்புரையாற்றினார்.

அப்போது கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, எங்களை எதிர்த்த கட்சியை காலில் மிதித்த கட்சி, சுண்டெலிக்கு எல்லாம், பயப்படமாட்டோம், டம் இருக்கிற வரை தான் விசில் அடிக்க முடியும், வட ஆற்காடு திமுகவின் கோட்டையாக இருந்தது.. இந்த ஊரில் விஜய் கூட்டம் கூட்டுகிறார், நம் வீட்டு பிள்ளைகள் அவர் பின்னால் ஓடுகிறார்கள்..
திமுக இல்லையென்றால் நடிகன் வரமுடியுமா? இந்தி எதிரிப்பால் தான் தமிழ் படம் ஓடுகிறது, தமிழ்நாட்டில் இந்தி படம் ஓடாது, காரணம் திமுக நடத்திய, இந்தி போராட்டம், போராடாமல் இருந்திருந்தால், ரயில் நிலையத்தில் வேலை செய்திருக்க வேண்டும்.எந்த கட்சியால் வாழ்ந்தார்களோ, தற்போது அந்த கட்சியை எதிர்க்கிறார்கள், அப்பாவிற்கு சோறுபோடாமல், தந்தையை கழுத்தை நெறிப்பவன், தாயை பாட்டிலால் அடிப்பவன் போன்றவர்கள் தான் திமுகவை எதிர்க்கிறார்கள், என பேசினார், மேலும் பெண்கள் நீங்கள் தான் வீட்டிற்குள் சென்று வாக்கு கேட்க வேண்டும், மீண்டும் ஸ்டாலின் ஆட்சியமைக்க உழைக்க வேண்டும் என்றும் ஆர்எஸ் பாரதி பேசினார்.
பின்னர் கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ். பாரதி இன்று வேலூர் மாவட்டம், கொல்லமங்கலத்தில், நடைப்பெற்ற, தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில், பேசிய விஜய், அண்ணா அறிவாலயம் பக்கத்தில் யார் நிழலுக்கு ஒதுங்கினாலும் கூட்டணியில் சேர்த்துக்கிறது: கொள்ளையடிச்சு வைத்திருக்கிற பணத்தில் பங்கு கொடுக்கிறது. அதுக்கு பேரு "கல்லாப்பெட்டி கூட்டணினு"வச்சிருக்கேன்.. கல்லாப்பெட்டி கூட்டணியை ரொம்ப கஷ்டப்பட்டு சேர்த்திருக்கிறார்கள்.. பழைய கூட்டணி கணக்கெல்லாம் வெச்சி ஜெயிக்க முடியாது என பேசினார்.
இந்த கேள்வியை செய்தியாளர் எழுப்பிய நிலையில் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்தார். அப்போது அவர் கூறும் போது, விஜய் முதலில் அவர் கொள்ளையடித்த பணத்தை வெளியே எடுத்து வர சொல்லுங்கள், காரணம் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஒன்றரை கோடி அபராதம் விதிக்கப்பட்ட, மனிதர் தான் விஜய், அவர் வந்து எங்களை பேசுவது, எங்கள் தகுதிக்கு நாங்கள் பதில் சொல்ல அவசியமில்லை.
காரணம் யார் கொள்ளை அடித்தது யார் பணம் வாங்கி இப்படி செய்கிறார்.. என்ன நாடகம்.. இன்னும் கொஞ்ச நாள் வெளிச்சத்திற்கு வரப்போகிறது, இவ்வளவு பேசுபவர் ஏன் மோடியை பற்றி பேசவில்லை? யார் யார் மூலம் தாக்கி பேச பார்க்கிறார்கள், திமுக ஆட்சி வருவது, தடுக்க முடியாது அடிக்க அடிக்க, பந்து உந்தும் அரை அரைக்க சந்தனம் மணக்கும், திமுகவை திட்ட திட்ட வெற்றிகள் குவியம் என பேட்டியளித்தார்..மேலும் இந்த கூட்டத்தில், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications