முதலிரவை வீடியோவில் எடுத்து.. 10 லட்சம் கேட்டு மிரட்டிய கணவர்.. கதறிய மனைவி.. கைது செய்த போலீஸ்
மனைவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கணவனை கைது செய்துள்ளனர்
Recommended Video
ஆரணி: முதலிரவை ரகசியமாக வீடியோ எடுத்து வைத்து கொண்டு, ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய கணவனை போலீசார் தூக்கி ஜெயிலில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டையை சேர்ந்த பெண் ஷ்யாமளா. வயசு 29. இவர் ஒரு கண் டாக்டர். ஆரணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கண் டாக்டராக வேலை பார்த்தார்.
இவருக்கும் ஆந்திர மாநிலம் சித்தூர் தூர்கா நகரை சேர்ந்த சத்தியநாராயணா என்ற என்ஜினீயருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் கல்யாணம் நடந்தது. அப்போது முதல் ஷ்யாமளா, சத்தியநாராயணன் வீட்டில் ஒன்றாக வசித்து வந்தார்.

வீடியோ
ஆனால் சத்தியநாராயணா தனது மனைவியுடன் முதலிரவு முதல் தாம்பத்ய உறவு கொண்டதை அவருக்கே தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை மனைவி இல்லாத நேரங்களில் பார்த்தும் ரசித்தும் வந்துள்ளார்.

ஆத்திரம்
இதனை ஒருநாள் ஷ்யாமளா பார்த்து விட்டு, அதிர்ச்சியானார். செல்போனில் இருந்த வீடியோவை டெலிட் செய்யுமாறு கேட்டுள்ளார். ஆனால் சத்தியநாராயணா மறுப்பு தெரிவித்துள்ளார். விஷயம் பெரிதாகி, தகராறாக வெடித்தது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சத்தியநாராயணா ஷ்யாமளாவை ஆபாசமாக பேசி சரமாரியாக தாக்கியுள்ளார்.

தகராறு
இதனால் மனமுடைந்த ஷ்யாமளா தன் பெற்றோரிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதார். இதை கேட்ட பெற்றோரும், சத்திய நாராயணாவிடம் சென்று, அனைத்தையும் மறந்துவிட்டு, குடும்பம் நடத்துமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் சத்தியநாராயணா அவர்களிடமும் தகராறு செய்துள்ளதாக தெரிகிறது.

வரதட்சணை
அதனால், "மகளுடன் குடும்பம் நடத்தாவிட்டால், வரதட்சனையாக கொடுத்த 75 சவரன் நகை, சீர்வரிசைகளை திருப்பி கொடு" என்று கேட்டுள்ளனர். இதற்கும் மறுத்த சத்தியநாராயணா, "கொடுத்தது எதுவுமே திரும்பி வராது. மேற்கொண்டு 10 லட்சம் ரூபாய் நீங்கள் கொடுத்தால் உன் மகளுடன் குடும்பம் நடத்துவேன். இல்லேன்னா, எடுத்து வச்சிருக்கிற ஆபாச வீடியோ வெளியே விட்டுடுவேன்" என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

ஜெயில்
இதற்கு மேல் பேசினால் வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்த பெண் டாக்டர் ஷ்யாமளா, ஆரணி மகளிர் போலீசில் போய் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தியநாராயணாவை கைது செய்து, ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications