கள்ளக்காதலனும் வேணும், புருஷனும் வேணும்னா எப்படி?.. கொதித்தெழுந்த கலா.. கடைசியில் 2 கொலை!
கணவனை கூலிப்படை வைத்து கொன்ற முதல் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
Recommended Video

வேலூர்: கள்ளக்காதலனும் வேணும், புருஷனும் வேணும்னா எப்படி? இப்படியும் பெண்கள் இருப்பார்களா என தெரியவில்லை.
திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை ஈச்சனேரி வட்டத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு வயது 40. திருமணமாகி ஆனந்தன், நந்தினி என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவ்வளவு காலம் குடும்பம் நல்லாதான் போய்ட்டு இருந்தது. ஆனால் போன வருஷம்தான் வினையே ஆரம்பித்தது.
[14 வயது சிறுமியை துப்பட்டாவால் கட்டி.. வாயில் சோப்பு ஆயிலை ஊற்றி.. சீரழிக்க முயன்ற அயோக்கியன்]

கலா - ஏகாம்பரம்
கலாதான் முதல் தவறு செய்ய துவங்கினார். ஏகாம்பரம் என்பவருடன் கள்ளக்காதல் ஆரம்பமானது. 2 குழந்தைகள் இருந்தும் கள்ளக்காதல் போதை கண்ணை மறைக்கவும், ஏகாம்பரத்தை கூட்டிக் கொண்டு வீட்டை விட்டே ஓடிப்போய் விட்டார்.

2-வது கல்யாணம்
இப்படி குடும்பம், குழந்தைகள், தன்னையும் தவிக்க விட்டுவிட்டு, துரோகமும் செய்துவிட்டு ஓடிப்போன மனைவியை நினைத்து கடுமையான விரக்திக்கு ஆளானார் சண்முகம். அதனால் மனைவி ஓடிப்போய் 6 மாசம் ஆன நிலையில், சுஜாதா என்பவரை சண்முகம் 2-வதாக கல்யாணம் செய்து கொண்டார்.

எங்களை சேர்த்து வையுங்க
இந்த விஷயம் கலாவுக்கு தெரிந்து விட்டது. இன்னொருவருடன் ஓடிப்போன கலா, திரும்பவும் ஊருக்குள் வந்தார். ஊர் பெரியவர்களிடம் போய், என்னையும், என் புருஷனையும் சேர்த்து வைங்க என்று சொன்னார். அதனால் ஊர் பெரியவர்களும், மனசு மாறி கலா வந்திருப்பதால், அவருடன் சேர்ந்து வாழுமாறு சண்முகத்திடம் எடுத்து சொன்னார்கள்.

ஆவேசமான கலா
ஆனால், ஏற்கனவே அவமானம், வெறுப்பு, அசிங்கமும் பட்ட சண்முகத்துக்கு கலாவை ஏற்றுக் கொள்ள மனசே இல்லை. துரோகம் செய்துவிட்டு போனவருடன் தன்னால் வாழ முடியாது என்று சொல்லிவிட்டார். இப்படி சண்முகம் சொல்லி விட்டதும், கலாவுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. அதனால் ஆவேசம் அடைந்த கலா, கணவரை கொல்ல திட்டம் போட்டார்.

தட்டி எழுப்பி கொலை
அதன்படி கள்ளக்காதலன் ஏகாம்பரத்தின் உதவியுடன் ஒரு கூலிப்படையையும் ரெடி பண்ணினார். நள்ளிரவு சண்முகம் வீட்டுக்குள் கூலிப்படையுடன் கலா உள்ளே நுழைந்தார். அறையில் தூங்கி கொண்டிருந்த சண்முகம், 2-வது மனைவி சுஜாதாவை தட்டி எழுப்பி இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்து அந்த கூலிப்படை. இருவரும் ரத்த வெள்ளத்திலேயே அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

ஒருவரை மடக்கி பிடித்தனர்
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். கும்பலை பார்த்ததும் கூலிப்படை அங்கிருந்து தப்ப முயன்றது. ஆனாலும் பொதுமக்கள் விரட்டியதில் ஒருவர் மட்டும் சிக்கி கொண்டார். அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தகவலறிந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனிப்படை அமைப்பு
தப்பியோடிய கூலிப்படையினருடன் சேர்ந்து லதாவும் கள்ளக்காதலனும் சேர்ந்து எஸ்கேப் ஆகி உள்ளதால், அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முதல்மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனையும், இரணடாவது மனைவியையும் கூலிப்படை வைத்து கொன்ற சம்பவம் வேலூர் மாவட்ட மக்களை உறைய வைத்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications