வேலூரில் விர்ன்னு ஏறிய ஆடுகள்.. விவசாயிகளை சுண்டியிழுத்த "ஜோடி".. கிட்டபோய் பார்த்தால்? ஒரே ஹேப்பி
வேலூர்: விரைவில் தீபாவளி பண்டிகை வருவதால், கால்நடை சந்தைகள் தமிழகத்தில் பிஸியாகியிருக்கின்றன. இதனால் வரும் நாட்களில் வியாபாரம் பெருகும் என்றும் விவசாயிகள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், வேலூர் கால்நடை சந்தைகளும் வியப்பை தந்து வருகின்றன.
தமிழகத்தின் கால்நடை சந்தைகள் எப்போதுமே பிரசித்தி பெற்றவையாகும்.. நிறைய கால்நடை சந்தைகள், வார வாரம் அல்லது மாத மாதம் நடப்பது வழக்கமான ஒன்று. இதுபோன்ற கால்நடை சந்தைகள்தான், கிராமப்புற விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

தமிழக கால்நடை சந்தைகள்: எனவே, தமிழகத்தின் சந்தைகளுக்கு வெளிமாநிலங்களிலும் நிறைய கிராக்கி உண்டு.. அதிலும் பண்டிகை காலங்களில், கால்நடை சந்தைகளில் கூடுதல் விற்பனைகள் ஏற்பட்டு, கறிக்கடைக்காரர்களையே உற்சாகப்படுத்திவிடும்.
அந்தவகையில், வேலூர் கே.வி.குப்பம் வார சந்தையில் கால்நடைகள் படுஜோராக விற்பனையாவது வழக்கமாகும்.. எப்போதுமே ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று கேவி குப்பத்தில் ஆட்டுச்சந்தை நடக்கும். அதேபோல ஒடுக்கத்தூர் கால்நடை சந்தைகள் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும்.
ஆடுகள் லோடு: அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் லோடு வேன் மூலம் கொண்டுவரப்பட்டு வேலூர் மாவட்ட கால்நடை சந்தைகளில் விற்பனை செய்யப்படும். ஆடுகளின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படும். வெள்ளாடுகள், கிடாய்கள், நாட்டு ரக கிடாய்கள், கசையாடுகள், செம்மறி ஆடுகள் என ரகங்கள் கொண்ட ஆடுகள் அதிகம் கொண்டு வரப்படும்.
வழக்கமாக வாரந்தோறும் 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை ஒடுக்கத்தூரில் நடப்பது வாடிக்கையாகும்.. ஆனால், கடந்த மாதம் முழுவதும் புரட்டாசி என்பதால் ஆட்டுச்சந்தை களையிழந்து வியாபாரமும் மந்தமாக நடந்தது. இப்போது புரட்டாசி முடிந்துள்ள நிலையில் பண்டிகை சீசனும் துவங்கியிருக்கிறது.
ஆடு விற்பனை: தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில், தற்போது நடந்த சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதனால், காலை 6 மணி முதலே சந்தையில் கூட்டம் களைகட்டியது. வியாபாரிகளும் போட்டி போட்டு கொண்டு ஆடுகளை விற்பனை செய்தார்கள்..
வழக்கமாக சந்தைக்கு வெள்ளாடுகள் மட்டும் கொண்டு வரப்படும் நிலையில், இந்த முறை செம்மறி ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.. அவைகள் பார்ப்பதற்கே கொழு கொழுவென இருப்பதை கண்டு, ஆடு வாங்க வந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்து, போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றார்கள்.. கிராக்கி அதிகம் என்பதால், ஒரு ஆட்டின் விலை முன்பைவிட கிடுகிடுவென உயர்ந்து 20000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன..
வேலூர் ஹேப்பி: அதேபோல, ஒரு ஜோடி ஆடுகள் 40 முதல் 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது. அந்தவகையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு, விவசாயிகளும் நல்ல லாபம் பார்த்துள்ளனர்.. இந்த ஒரேநாளில் மட்டும் 17 லட்சத்திற்கு மேலாக வர்த்தகம் நடந்ததாக மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள் வியாபாரிகள்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications